/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சிலிண்டர் திருட்டு: போலீசார் விசாரணை
/
சிலிண்டர் திருட்டு: போலீசார் விசாரணை
ADDED : அக் 27, 2025 11:54 PM

கோவை: வீடுகளுக்கு வினியோகிக்க வைத்திருந்த காஸ் சிலிண்டரை திருடிச் சென்ற நபர்களை, போலீசார் தேடி வருகின்றனர்.
கோவை ரோஸ்கார்டன் பகுதியில் தனியார் காஸ் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனம் சார்பில், வீடுகளுக்கு சிலிண்டர்களை வினியோகிக்க அப்பகுதியில் மொத்தமாக ஒரு இடத்தில் இறக்கி வைப்பது வழக்கம். நேற்று வழக்கம் போல், சிலிண்டர்களை வீடு ஒன்றின் முன் இறக்கி வைத்திருந்தனர். அப்போது பைக்கில் வந்த நபர்கள் இருவர், சிலிண்டரை திருடி தப்பினர். இது, அப்பகுதி வீடு ஒன்றில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியது. சிலிண்டர் மாயமானது குறித்து நிறுவனம் சார்பில் கடைவீதி போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது. வழக்கு பதிந்த போலீசார், திருட்டில் ஈடுபட்ட நபர்களை தேடி வருகின்றனர்.

