/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
7 மாத கர்ப்பிணி பலி போலீசார் விசாரணை
/
7 மாத கர்ப்பிணி பலி போலீசார் விசாரணை
ADDED : அக் 10, 2025 12:46 AM
கோவை; உத்திரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் ஆனந்தன், 34. கோவை பாப்பநாயக்கன்பாளையம் பரமேஸ்வரன் லே-அவுட் பகுதியில் தங்கி, காரமடையில் உள்ள ஓட்டலில் பணி புரிகிறார்.
இவரது மனைவி இந்திராவதி, 36, ஏழு மாத கர்ப்பிணி. கடந்த, 8ம் தேதி ஆனந்தன் பணிக்கு சென்றிருந்தார்.
அவரை தொடர்பு கொண்ட இந்திராவதி, பிரசவ வலி வருவதாக தெரிவித்தார்.
வீடு திரும்பிய ஆனந்தன், மனைவியை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முயன்றார். அதற்குள் வலி தீவிரமாகி, ரத்தபோக்கு ஏற்பட்டு மயக்கம் அடைந்தார்.
மருத்துவமனை அழைத்துச் செல்ல, 108 சேவையை அழைத்தார். 108 சேவை தொழில்நுட்ப உதவியாளர் பரிசோதித்ததில், இந்திராவதி ஏற்கனவே உயிரிழந்தது தெரிந்தது.
ரேஸ்கோர்ஸ் போலீசார் விசாரிக்கின்றனர்.