/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
லாரி டிரைவர் மரணம் போலீசார் விசாரணை
/
லாரி டிரைவர் மரணம் போலீசார் விசாரணை
ADDED : டிச 29, 2025 05:20 AM
போத்தனூர்: கோவை, செட்டிபாளையம் அடுத்து ஓராட்டுக்குப்பையில் ஆன்லைன் ஷாப்பிங் நிறுவன குடோன் உள்ளது. நேற்று முன்தினம் மாலை, பெங்களூருவிலிருந்து பொருட்களை ஏற்றிக்கொண்டு கன்டெய்னர் லாரி ஒன்று இங்கு வந்தது. சேலம் வாழப்பாடியை சேர்ந்த முருகேசன், 46 லாரியை ஓட்டி வந்துள்ளார்.
இரவு லாரியை பார்க்கிங் பகுதியில் நிறுத்திய முருகேசன், சாப்பிட்ட பின் லாரியினுள் படுத்துள்ளார். சில மணி நேரத்திற்குப் பின் நிறுவன காவலாளி, லாரியை ஸ்டாண்டில் நிறுத்த கூறுவதற்காக, முருகேசனை அழைத்தபோது, அவர் மயக்க நிலையில் இருந்துள்ளார்.
அருகிலிருந்தோர், அவரை ஆம்புலன்ஸ் மூலம் சிங்காநல்லூர், இ.எஸ்.ஐ., மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். பரிசோதித்த டாக்டர்கள் வழியிலேயே முருகேசன் உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளனர். தகவலறிந்து வந்த முருகேசனின் மனைவி சசிகலா புகாரில், செட்டிபாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.

