/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
லாரியில் மண் கடத்தல் போலீசார் விசாரணை
/
லாரியில் மண் கடத்தல் போலீசார் விசாரணை
ADDED : பிப் 22, 2024 04:56 AM

அன்னுார்: சட்டவிரோதமாக மண் கடத்திய லாரிகளை அதிகாரிகள் பிடித்தனர். ஒரு லாரி பிடித்த பின்பும் தப்பி சென்றது. மற்றொரு லாரியில் இருந்த மண்ணை கொட்டி விட்டு டிரைவர் தப்பினார்.
அன்னுார் அருகே காட்டம்பட்டியில், அனுமதியின்றி மண் ஏற்றி வந்த இரண்டு டிப்பர் லாரிகளை பொதுமக்கள் நேற்று மதியம் தடுத்து நிறுத்தி, வருவாய் துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
கிராம நிர்வாக அலுவலர் அறிவுடை நம்பி, கிராம உதவியாளர் கார்த்திகேயன் ஆகியோர், இரு லாரிகளையும், அன்னுார் போலீஸ் ஸ்டேஷனுக்கு செல்லும்படி கூறி லாரியுடன் வந்தனர்.
பாதி வழியில் ஒரு லாரி, வேகமெடுத்து சென்று விட்டது. மற்றொரு லாரியில் இருந்த மண்ணை கொட்டிவிட்டு, டிரைவர் தப்பினார்.
லாரிகள் சாலையூரிலிருந்து அனுமதியின்றி சட்டவிரோதமாக மண் எடுத்து வந்தது தெரிய வந்தது. அன்னுார் போலீஸ் ஸ்டேஷனில், ஒரு லாரியை அதிகாரிகள் ஒப்படைத்தனர். எஸ்.ஐ., கவுதம் மற்றும் போலீசார், லாரி உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுனர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.