/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'ஹெல்மெட்' அணியாதவருக்கு போலீசார் நுாதன தண்டனை
/
'ஹெல்மெட்' அணியாதவருக்கு போலீசார் நுாதன தண்டனை
UPDATED : டிச 19, 2024 07:45 AM
ADDED : டிச 18, 2024 08:28 PM

பொள்ளாச்சி; பொள்ளாச்சி அருகே, ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டியவருக்கு, நுாதன தண்டனை வழங்கி கோமங்கலம் போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில், ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும் என வாகன ஓட்டுநர்களிடம் போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். ெஹல்மெட் அணியாமல் வந்தால் அபராதம் விதிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன.
இந்நிலையில், பொள்ளாச்சி அருகே அந்தியூர் சோதனைச்சாவடியில், கோமங்கலம் எஸ்.ஐ., ரபீனா மரியம் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் வந்த வாகன ஓட்டுநரை நிறுத்தி, போலீசார் அறிவுரை வழங்கினர். அவரிடம், 'தலை கவசம், உயிர் கவசம்' என்ற விழிப்புணர்வு பதாகையை கொடுத்து, வாகனத்தின் அருகே நிற்க வைத்து, நுாதன தண்டனை வழங்கினர். அதன்பின், ெஹல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டக்கூடாது என எச்சரித்து அனுப்பினர்.