தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ போலீஸ் செய்திகள்

போலீஸ் செய்திகள்

போலீஸ் செய்திகள்


ADDED : ஏப் 09, 2025 10:17 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 09, 2025 10:17 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பஸ் மோதி முதியவர் பலி


பொள்ளாச்சி அருகே, கோமங்கலம்புதுாரை சேர்ந்தவர் லட்சுமணசாமி,60. இவர், நேற்று முன்தினம் இருசக்கர வாகனத்தில், பொள்ளாச்சி - கோழிக்குட்டை ரோட்டில் சென்றார். அவ்வழியாக வந்த அரசு பஸ் மோதியதில், லட்சுமணசாமி படுகாயமடைந்தார். அவரை மீட்டு, பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். கோமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.

தொழிலாளிகள் தற்கொலை


பொள்ளாச்சி அருகே, நல்லாம்பள்ளியை சேர்ந்தவர் மணிகண்டன், 25; கூலித்தொழிலாளி. மது போதைக்கு அடிமையான இவர், பெற்றோரிடம் சண்டை போடுவது வழக்கமாக உள்ளதாக தெரிகிறது. நேற்று அதுபோன்று குடிபோதையில் அப்பாவுடன் சண்டையிட்டு அவரை வீட்டில் இருந்து வெளியே அனுப்பி கதவை தாழிட்டார். சிறிது நேரம் கழித்து சென்று பார்த்த போது, வீட்டினுள் மணிகண்டன் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இது குறித்து கோமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.

* பொள்ளாச்சி, கஞ்சம்பட்டியை சேர்ந்தவர் மணிகண்டன், 39; கூலித்தொழிலாளி. மனைவி மற்றும், 17, 15 வயதுடைய இரண்டு பெண் குழந்தைகளுடன் வசித்து வந்தார்.குடிப்பழக்கத்துக்கு அடிமையாகி வீட்டுக்கு பணம் தருவதில்லை. மனைவியுடன் சண்டையிட்ட அவர், மதுவில் அரளி விதையை அரைத்து கலந்து குடித்தார். அவரை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரும் வழியில் இறந்தார். இது குறித்து கோமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.

மாணவி தற்கொலை


ஆனைமலை, திவான்சாபுதுாரை சேர்ந்த, 15 வயது மாணவி அப்பகுதியில் உள்ள பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார். நேற்றுமுன்தினம் வேலைக்கு சென்ற அவரது அம்மா வீட்டுக்கு வந்த போது, அங்கு இருந்த அவரது மகன், 'அக்கா வீட்டுக்குள் சென்று தாழிட்டு கொண்டார். கதவை திறக்கவில்லை,' என தெரிவித்தார். இதையடுத்து, கதவை திறந்து உள்ளே சென்று பார்த்த போது, மாணவி துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. மாணவி தற்கொலைக்கு காரணம் குறித்து ஆனைமலை போலீசார் விசாரிக்கின்றனர்.

பெண்ணை வீடியோ எடுத்தவர் கைது


பொள்ளாச்சி அருகே, ஆனைமலை திவான்சாபுதுாரில் உள்ள கோவிலில், 25 வயதான பெண், தனது குடும்பத்துடன் சென்று நேர்த்திக்கடன் செலுத்தி, இரண்டு பெண் குழந்தைகளுடன் மொட்டை அடித்துள்ளார். அந்த பெண் பூ முடி கொடுத்த பின், அங்குள்ள பாத்ரூமில் குளிக்க சென்ற போது, கணபதிபாளையத்தை சேர்ந்த சதீஸ்குமார்,37, என்பவர் அந்த பெண்ணை வீடியோ எடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து அந்த பெண் கொடுத்த புகாரின் பேரில், ஆனைமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து, சதீஸ்குமாரை கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us