/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குன்னுாரில் போலீசார் அணிவகுப்பு
/
குன்னுாரில் போலீசார் அணிவகுப்பு
ADDED : ஆக 12, 2025 09:01 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குன்னுார்; நீலகிரி மாவட்டத்தில் வரும், 27ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு பிறகு பல்வேறு இடங்களில் விநாயகர் விசர்ஜனம் நடக்கிறது. விழாவை முன்னிட்டு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். இதனையொட்டி குன்னுாரில் போலீசாரின் அணிவகுப்பு ஊர்வலம் நடந்தது.
ஊட்டி டி.எஸ்.பி., ராஜ்குமார் தலைமை வகித்து ஊர்வலத்தை துவக்கி வைத்தார். சிம்ஸ்பூங்காவில் துவங்கிய ஊர்வலம், பெட்போர்டு, மவுன்ட் ரோடு, பஸ்ஸ்டாண்ட் வழியாக தீயணைப்பு நிலைய வளாகத்தை அடைந்தது. பேண்ட் வாத்தியம் இசைக்க, மத்திய தொழிற் பாதுகாப்பு படையினர், ஆயுத படை போலீசார், குன்னுார் போலீசார் மற்றும் போலீஸ் வாகனங்களுடன் அணி வகுத்து வந்தனர்.

