sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 26, 2025 ,ஐப்பசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

கோவை நகரில் 712 விநாயகர் சிலைகள் வைக்க போலீஸ் அனுமதி; புறநகரில் 1,650; பாதுகாப்புக்கு 2,800 பேர்

/

கோவை நகரில் 712 விநாயகர் சிலைகள் வைக்க போலீஸ் அனுமதி; புறநகரில் 1,650; பாதுகாப்புக்கு 2,800 பேர்

கோவை நகரில் 712 விநாயகர் சிலைகள் வைக்க போலீஸ் அனுமதி; புறநகரில் 1,650; பாதுகாப்புக்கு 2,800 பேர்

கோவை நகரில் 712 விநாயகர் சிலைகள் வைக்க போலீஸ் அனுமதி; புறநகரில் 1,650; பாதுகாப்புக்கு 2,800 பேர்


ADDED : ஆக 26, 2025 10:57 PM

Google News

ADDED : ஆக 26, 2025 10:57 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை; விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, கோவைநகரில் 712 சிலைகள், புறநகரில் 1,650 சிலைகள் பிரதிஷ்டை செய்து வழிபட, அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மாவட்டம் முழுவதும், 2,800 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். சதுர்த்தி கொண்டாட்டம் குறித்த கட்டுப்பாடுகள் மற்றும் விதிகளை, போலீசார் வெளியிட்டுள்ளனர்.

அவை:


* சிலை வைக்கும் இடம் தனியாருக்கு சொந்தமாக இருந்தால், நில உரிமை யாளரிடமும், அரசு புறம்போக்கு இடமாக இருந்தால், சம்பந்தப்பட்ட துறை மற்றும் உள்ளாட்சி அமைப்பு, நெடுஞ்சாலை துறையிடம் தடையின்மை சான்று பெற்றிருக்க வேண்டும்.

* ஒலிபெருக்கி காலையில் 2 மணி நேரம், மாலையில் 2 மணி நேரம் மட்டுமே பயன்படுத்தலாம். அதிக ஒலி வைக்கக்கூடாது. உள்ளூர் போலீஸ் ஸ்டேஷனில் அனுமதி பெற வேண்டும்.

* சிலை வைக்கும் இடங்களில், தீ தடுப்பு வசதி, மின் இணைப்பு இருக்க வேண்டும்.

* களிமண்ணால் தயாரித்த சிலை மட்டுமே வைக்கலாம். மாசு ஏற்படுத்தக்கூடிய பிளாஸ்டர் ஆப் பாரீஸ், தடை செய்யப்பட்ட பொருட்கள், வண்ணங்கள் கொண்ட சிலை வைக்க கூடாது.

* அவசரகால மருத்துவ வசதி இருக்க வேண்டும். எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை வைக்க கூடாது.

* மருத்துவமனை, கல்வி நிறுவனங்கள், பிற மத வழிபாட்டு தலங்களுக்கு அருகே சிலை வைக்க கூடாது.

* பிளக்ஸ் பேனர் வைக்கக் கூடாது.

* சிலை பாதுகாப்புக்கு இரண்டு தன்னார்வலர்கள், 24 மணி நேரமும் இருக்க வேண்டும்.

* சிலை கரைக்க அனுமதிக்கப்பட்ட நேரத்தில், அனுமதித்த வழித்தடங்களில், அனுமதித்த வாகனத்தில் மட்டுமே செல்ல வேண்டும்.

* பட்டாசு, வெடிகள் பயன்படுத்தக்கூடாது.






      Dinamalar
      Follow us