/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'மைவி3' ஆட்ஸ் விஜயராகவன் சிகிச்சைக்கு பின் சிறையில் அடைப்பு காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டம்
/
'மைவி3' ஆட்ஸ் விஜயராகவன் சிகிச்சைக்கு பின் சிறையில் அடைப்பு காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டம்
'மைவி3' ஆட்ஸ் விஜயராகவன் சிகிச்சைக்கு பின் சிறையில் அடைப்பு காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டம்
'மைவி3' ஆட்ஸ் விஜயராகவன் சிகிச்சைக்கு பின் சிறையில் அடைப்பு காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டம்
ADDED : மார் 08, 2024 02:18 AM
கோவை;'மைவி3' விஜயராகவன் சிகிச்சைக்கு பின் சிறையில் அடைக்கப்பட்டார். அவரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
மதுரை தனக்கன்குளத்தை சேர்ந்தவர் விஜயராகவன், 48. இவர் கோவையை மையமாக கொண்டு செயல்பட்ட 'மைவி3' ஆட்ஸ் ஆன்லைன் நிறுவனத்திற்கு ஹெர்பல் மற்றும் உணவு பொருட்களை சப்ளை செய்வதற்காக கோவை அன்னுார், புதுச்சேரியில் சித்வா ஹெர்பல் அண்டு புட்ஸ் என்ற நிறுவனத்தை நடத்தி வந்தார்.
மேலும் அவர் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் இயற்கை மருத்துவத்துறையில் பி.எச்டி., டாக்டர் பட்டம் பெற்றதாக கூறப்பட்டது. இந்நிலையில் 'மைவி3' ஆட்ஸ் ஆன்லைன் நிறுவனத்தில் நிதி மோசடி நடைபெற வாய்ப்பு உள்ளதாக கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
புகாரின் பேரில் ஆன்லைன் நிறுவன உரிமையாளர் சத்தி ஆனந்தன் மற்றும் சித்வா ஹெர்பல் அண்டு புட்ஸ் என்ற நிறுவனத்தை நடத்தி வந்த விஜயராகவன் ஆகியோரிடம் கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசார் விசாரித்தனர்.
மேலும் விஜயராகவனின் பி.எச்டி., பட்டம் குறித்து போலீசார் சந்தேப்பட்டனர். இதை தொடர்ந்து போலீசார் அந்த டாக்டர் பட்டத்தை சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகத்திற்கு மெயில், கடிதம் மூலம் அனுப்பி பரிசோதித்தனர். அதில் பல்கலைக்கழகத்தில் படிக்காமல் போலியாக தயாரித்த டாக்டர் பட்டம் என்பது கண்டு பிடிக்கப்பட்டது.
இதையடுத்து மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின்பேரில் விஜயராகவன் மீது மோசடி உள்ளிடட் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்தனர்.
தொடர்ந்து மதுரையில் பதுங்கி இருந்த விஜயராகவனை கடந்த, 2-ம் தேதி மாநகர குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து கோவை அழைத்து வந்தனர். இதனிடையே விஜயராகவன் உடல்நிலை பாதிக்கப்பட்டதால் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை நிறைவு பெற்றதை தொடர்ந்து அவர் மீண்டும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இதையடுத்து கைது செய்யப்பட்ட விஜயராகவனை காவலில் எடுத்து விசாரிக்க கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசார் கோவை ஜே.எம்.,7 கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். 4 நாட்கள் அவரை காவலில் எடுத்து விசாரிக்க திட்டமிட்டு உள்ளதாக குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்தனர்.

