தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ பிளஸ் 2 வினாத்தாளுக்கு போலீஸ் பாதுகாப்பு

 பிளஸ் 2 வினாத்தாளுக்கு போலீஸ் பாதுகாப்பு

 பிளஸ் 2 வினாத்தாளுக்கு போலீஸ் பாதுகாப்பு


ADDED : பிப் 28, 2026 05:57 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 28, 2026 05:57 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை: கோவை மாவட்டத்தில் பிளஸ் 2 வினாத்தாள் வைக்கப்பட்டுள்ள ஸ்ட்ராங் ரூம்களுக்கு, துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

பிளஸ் -2 அரசு பொதுத்தேர்வு வரும் மார்ச் 2ல் துவங்கி 25 வரை கோவையிலுள்ள, 130 மையங்களில் நடக்கிறது. 365 அரசு மற்றும் அரசு உதவிபெறும், தனியார் பள்ளிகளை சேர்ந்த, 35,712 மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர்.

பிளஸ் 2 தேர்வுக்கான வினாத்தாள்கள், ராஜவீதியிலுள்ள மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலைக்கல்வி) அலுவலகத்தில் உள்ள ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டுள்ளது. ஸ்ட்ராங் ரூமுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தேர்வு முடியும் வரை, இந்த மையங்களில் சி.சி.டி.வி., கேமராக்கள் பொருத்தப்பட்டு அவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர்கள் எளிதில் பார்த்து தெரிந்து கொள்ளும் வகையில், ஆன்லைனில் இணைக்கப்பட்டுள்ளன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us