/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
விடைத்தாள் திருத்தும் பணிக்கு துப்பாக்கியுடன் போலீஸ் பாதுகாப்பு
/
விடைத்தாள் திருத்தும் பணிக்கு துப்பாக்கியுடன் போலீஸ் பாதுகாப்பு
விடைத்தாள் திருத்தும் பணிக்கு துப்பாக்கியுடன் போலீஸ் பாதுகாப்பு
விடைத்தாள் திருத்தும் பணிக்கு துப்பாக்கியுடன் போலீஸ் பாதுகாப்பு
ADDED : ஏப் 21, 2025 10:05 PM

கோவை, ; கோவையில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி, இரண்டு மையங்களில் தொடங்கியுள்ளது.
கோவை கல்வி மாவட்டத்தில், ஆவாரம்பாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலை பள்ளி மற்றும் துடியலூரில் உள்ள, வி.சி. சுப்பையா மெட்ரிக் மேல்நிலை பள்ளி ஆகிய மையங்களில், இந்த பணிகள் நடைபெற்று வருகின்றன.
இவ்விடங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இரு மையங்களிலும் 1,000க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், விடைத்தாள்களை திருத்தி வருகின்றனர். இப்பணி ஏப்., 30ம் தேதி வரை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விடைத்தாள் திருத்தும் பணிகள் முடிவடைந்தவுடன், தேர்வு முடிவுகள் மே 19ம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.
முன்னதாக, ஏப்ரல் 6ம் தேதி பிளஸ் 2 பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணியை ஆசிரியர்கள் புறக்கணித்தது, பதற்றத்தை ஏற்படுத்தியிருந்தது.
தமிழ்நாடு முதுநிலைப்பட்டதாரி ஆசிரியர்கள் கழகத்தின் வருவாய் மாவட்ட தலைவர் முகமது காஜா முகைதீன் கூறுகையில், “விடைத்தாள் திருத்தும் பணியில், எங்களது நியாயமான கோரிக்கைகள் புறக்கணிக்கப்பட்டு, தொலைதூர மையங்களில் பணியமர்த்தப்பட்டிருந்தாலும் கூட, இயக்குனரின் கோரிக்கையை மதித்து இந்த பணியை புறக்கணிக்காமல், விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்டு வருகிறோம்,” என்றார்.