/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
போலீசார், பொதுமக்கள் விளையாட்டு போட்டி
/
போலீசார், பொதுமக்கள் விளையாட்டு போட்டி
ADDED : செப் 07, 2025 09:31 PM

பெ.நா.பாளையம்; பெரியநாயக்கன்பாளையத்தில் போலீசார் தினத்தையொட்டி பொதுமக்கள் - போலீசார் நல்லுறவு விளையாட்டுப் போட்டிகள் நடந்தன.
பெரியநாயக்கன்பாளையம் பாலமலை ரோட்டில் உள்ள, 'மை லைப்' விளையாட்டு அகாடமியில் பெரியநாயக்கன்பாளையம் டி.எஸ்.பி., பொன்னுசாமி தலைமையில் நிகழ்ச்சி நடந்தது. டென்னிஸ் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு போட்டிகளை போலீசார் மற்றும் பொதுமக்கள் இணைந்து விளையாடினர்.
நிகழ்ச்சியில் பெரியநாயக்கன்பாளையம் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் கண்ணன், எஸ்.ஐ.,க்கள் நமச்சிவாயம், செந்தில்குமார் உள்ளிட்ட, 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். போலீசார் தினத்தையொட்டி காவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்.
போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப் பட்டன.