/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மின் ஊழியரை தாக்கிய நபரிடம் போலீஸ் விசாரணை
/
மின் ஊழியரை தாக்கிய நபரிடம் போலீஸ் விசாரணை
ADDED : மே 06, 2025 11:35 PM
நெகமம்: நெகமம் பகுதியில், மின் ஊழியரை தாக்கிய நபரிடம் போலீசார் விசாரிக்கின்றனர்.
பொள்ளாச்சி அருகே உள்ள, குள்ளக்காபாளையத்தை சேர்ந்தவர் மோகன்ராஜ், 50. இவர், தாமரைக்குளம் மின்வாரிய அலுவலகத்தில் மின் ஆய்வாளராக பணியாற்றினார். தற்போது, செட்டியக்காபாளையம் பகுதியில் பணியாற்றி வருகிறார்.
நேற்று முன்தினம், செட்டியக்காபாளையத்தில் உள்ள தனியார் தோட்டத்தில் ஏற்பட்ட மின் வெட்டு காரணமாக, தோட்டத்தில் வேலை செய்யும் கார்த்தி, 31, என்பவர், மோகன்ராஜிடம் மின்வெட்டு ஏற்பட்டுள்ளதை தெரிவித்தார். மோகன்ராஜ் சம்பவ இடத்திற்கு தாமதமாக சென்றார்.
இதனால், ஆத்திரமடைந்த கார்த்தி, 'உங்களுக்கு காலையில் போன் செய்தால், மாலையில் வருகிறீர்கள்' என கேட்டுள்ளார். அதற்கு, 'செட்டியக்காபாளையம் சுற்று வட்டார பகுதியில் ஏற்பட்ட மின் தடையை சரி செய்து விட்டு வர தாமதமானது,' என மோகன்ராஜ் தெரிவித்துள்ளார்.
அப்போது, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. இதில், ரோட்டோரம் நின்றிருந்த ஆட்டோ மீது விழுந்ததில் மோகன்ராஜ்க்கு தலையில் காயம் ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து, அவரை பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் குறித்து, நெகமம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.