/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பெட்டிக்கடைகளில் போலீசார் சோதனை
/
பெட்டிக்கடைகளில் போலீசார் சோதனை
ADDED : ஏப் 11, 2025 10:42 PM

மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையத்தில் வருவாய்துறை மற்றும் போலீசார் இணைந்து கடைகளில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என சோதனை மேற்கொண்டனர்.
கோவை மாவட்ட கலெக்டர் பவன்குமார் உத்தரவின் பேரில் பள்ளி, கல்லூரிகள் மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் வருவாய்துறை மற்றும் போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
இதன் ஒருபகுதியாக நேற்று மேட்டுப்பாளையம் சி.டி.சி.,டிப்போ அருகே உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு அருகில் உள்ள பெட்டிக்கடை, மளிகைக் கடைகளில் மேட்டுப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சின்ன காமணன், தாசில்தார் ராம்ராஜ் ஆகியோர் சோதனை நடத்தினர். அப்போது தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பனை செய்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரிக்கை விடுத்தனர்.
இந்த சோதனையின் போது, குட்கா பொருட்கள் எதுவும் பறிமுதல் செய்யப்படவில்லை.----