/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குற்றங்களை தடுக்க உதவும் 'சி.சி.டி.வி.,' கேமரா விழிப்புணர்வு ஏற்படுத்தும் போலீசார்
/
குற்றங்களை தடுக்க உதவும் 'சி.சி.டி.வி.,' கேமரா விழிப்புணர்வு ஏற்படுத்தும் போலீசார்
குற்றங்களை தடுக்க உதவும் 'சி.சி.டி.வி.,' கேமரா விழிப்புணர்வு ஏற்படுத்தும் போலீசார்
குற்றங்களை தடுக்க உதவும் 'சி.சி.டி.வி.,' கேமரா விழிப்புணர்வு ஏற்படுத்தும் போலீசார்
ADDED : மார் 20, 2025 11:30 PM

பொள்ளாச்சி,: பொள்ளாச்சி நகர் மற்றும் சுற்றுப்பகுதி கிராமங்களில், பொதுமக்கள் ஒன்றிணைந்து, அவரவர் பகுதியில் 'சி.சி.டி.வி.,' கேமரா பொருத்த போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
பொள்ளாச்சி நகர் மற்றும் சுற்றுப்பகுதி கிராமங்களில், 'சி.சி.டி.வி.,' கேமரா பயன்பாடு குறித்து, மக்கள் அறிந்து கொள்ளாமல் உள்ளனர். சில வீடுகள் மற்றும் வணிக கடைகளில், 'சி.சி.டி.வி.,' கேமரா பொருத்தி இருந்தாலும், நகை பறிப்பு, வழிப்பறி, திருட்டு போன்ற சம்பவங்களில், அதனை பார்வையிடும் போது, பெயரளவில் மட்டும் இயங்குவது தெரியவருகிறது.
ஏதோ பெயருக்கு கேரமா பொருத்தாமல், தங்கள் உடைமைகளை பாதுகாக்கும் காவலாளியாக நினைத்து, 'சி.சி.டி.வி.,' கேமரா பொருத்த வேண்டும் என, போலீசார் தெரிவிக்கின்றனர்.
அவ்வகையில், பொள்ளாச்சி நகர் மற்றும் சுற்றுப்பகுதி கிராமங்களில், பொதுமக்களை ஒன்றிணைத்து, அவரவர் பகுதியில், 'சி.சி.டி.வி.,' கேமரா பொருத்த, கூடுதல் எஸ்.பி., சிருஷ்டி சிங் தலைமையிலான போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இது குறித்து, கூடுதல் எஸ்.பி., கூறியதாவது:
நகை பறிப்பு, வழிப்பறி, திருட்டு, ஈவ்டீசிங் என பல வழக்குகளில், குற்றவாளிகளை கண்டறிந்து பிடிக்க போலீசாருக்கு பெரும் உதவியாக 'சி.சி.டி.வி.,' கேமரா உள்ளது. நகரில், முக்கிய பகுதிகளிலும், சாலைகளிலும் கேமரா பொருத்தப்பட்டு, போலீசாரின் கட்டுப்பாட்டில் உள்ளது.
அதேநேரம், பல இடங்களில் 'சி.சி.டி.வி.,' கேமராக்கள் பொருத்தப்படாமல் உள்ளது. இதனால், குற்ற சம்பவங்கள் நடைபெற்றால் கண்டறிவதில், சிரமம் ஏற்படுகிறது. தனிநபர் வீடு கட்டும்போது, அதற்கான கட்டுமான செலவுடன் வீட்டிற்கு வெளியே 'சி.சி.டி.வி.,' கேமரா பொருத்துவது முக்கியம்.
இதனால், வீடு, சுற்றுப்புற பகுதி பாதுகாப்பாக இருக்கும். மிகப் பெரிய வணிக வளாகங்கள் மட்டுமன்றி, சிறிய கடைகளுக்கும் 'சி.சி.டி.வி.,' கேமரா பொருத்துவது அவசியம். வர்த்தக சங்கத்தினர், குடியிருப்போர் நலச் சங்கத்தினர், சமுதாய அக்கறை உள்ள அமைப்புகள் இணைந்து, நகரின் உள்கட்டமைப்பு வசதிகளுடன் 'சி.சி.டி.வி.,' கேமரா பொருத்த முன்வர வேண்டும்.
இவ்வாறு, அவர் கூறினார்.