sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

போலீஸ் செய்திகள்

/

போலீஸ் செய்திகள்

போலீஸ் செய்திகள்

போலீஸ் செய்திகள்


ADDED : பிப் 17, 2025 11:01 PM

Google News

ADDED : பிப் 17, 2025 11:01 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பூச்சி மருந்து குடித்தவர் இறப்பு


ஆனைமலை, வேட்டைக்காரன்புதுார் தேவிபட்டணத்தை சேர்ந்தவர் முனியப்பன், 30; கூலித்தொழிலாளி. இவரது மனைவி ேஹமாவதி,26, கடந்த மாதம், 26ம் தேதி தேனி மாவட்டம் பெரியகுளத்தில் வசிக்கும் ேஹமாவதியின் தந்தை வீட்டில் வழுக்கி விழுந்தார். அதனால், அங்கு சென்று தந்தையை கவனித்து வருகிறார்.

இந்நிலையில், கடந்த 15ம் தேதி ேஹமாவதியிடம், உறவினர்கள், போன் செய்து முனியப்பன் பூச்சிமருந்து குடித்து கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருப்பதாக தெரிவித்தனர்.

இதையடுத்து, அவர், கோவை அரசு மருத்துவமனைக்கு சென்ற போது சிகிச்சையில் இருந்த முனியப்பன் பேச முடியாமல் இருந்துள்ளார். சிகிச்சை பலனின்றி நேற்றுமுன்தினம் இறந்தார். இது குறித்து ஆனைமலை போலீசார் விசாரிக்கின்றனர்.

சேவல் சண்டை; இருவர் கைது


கோட்டூர் எஸ்.ஐ., நாகராஜன் மற்றும் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது தென்சங்கம்பாளையம் ஆற்றுப்பகுதியில் சேவல் சண்டையில் ஈடுபட்ட, வேடசந்துார் தென்சங்கம்பாளையத்தை சேர்ந்த சூர்யபிரகாஷ்,23, கண்ணன்,23 ஆகியோரை கைது செய்து, அவர்களிடம் இருந்து, காயமடைந்த இரண்டு சேவல்களை பறிமுதல் செய்தனர்.

புகையிலை விற்ற பேக்கரிக்கு 'சீல்'


நெகமம், காட்டம்பட்டியை சேர்ந்தவர் ராமமூர்த்தி, 49, பேக்கரி நடத்தி வருகிறார். இவரது கடையில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதைத்தொடர்ந்து, கிணத்துக்கடவு உணவு பாதுகாப்பு அதிகாரி பாலசுப்ரமணியத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பேக்கரியில், சோதனை செய்த போது புகையிலை பொருட்கள் விற்பனை செய்வது உறுதியானதை தொடர்ந்து, ராமமூர்த்தியை போலீசார் கைது செய்து, 400 கிராம் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். உணவு பாதுகாப்பு அதிகாரி பாலசுப்ரமணியம், அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்ததற்காக, போலீசார் முன்னிலையில் பேக்கரிக்கு 'சீல்' வைத்தார்.

நகை திருடியவர் கைது


பொள்ளாச்சி அழகப்பா லே - அவுட்டை சேர்ந்த சுவாமிநாதன்,67; ஓய்வு பெற்ற மீன்வளத்துறை மேலாளர். கடந்த, 9ம் தேதி இவரது வீட்டின் பூட்டை உடைத்து பணம் மற்றும் ஒன்பது கிராம் நகை திருட்டு போனது. இது குறித்து, கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர் குறித்து விசாரித்தனர்.

விசாரணையில், கேரளா மாநிலம் மலப்புரத்தை சேர்ந்த அலிகோயா, 51, என்பவர் திருடியது தெரியவந்தது. இதையடுத்து, அவரை கைது செய்த போலீசார், 15 ஆயிரம் ரூபாய் பணம், ஒன்பது கிராம் நகையை பறிமுதல் செய்தனர்.

கஞ்சா விற்றவர் கைது


கோட்டூர் குமரன் கட்டம் அருகே, சந்தேகப்படும்படி நின்ற நபரை பிடித்து போலீசார் விசாரித்தனர். விசாரணையில், கோட்டூரை சேர்ந்த மல்லீஸ்வரன்,32, என்றும், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சாவை விற்பனைக்காக வைத்து இருப்பதும் கண்டறியப்பட்டது. இதையடுத்து, அவரை கைது செய்த போலீசார், ஐந்து கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

மது குடித்தவர் கைது


ஆழியாறு எஸ்.எஸ்.ஐ., முருகவேல் மற்றும் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது, கோபால்பதி ரோடு அருகே தொண்டாமுத்துாரை சேர்ந்த முருகேசன்,46, என்பவர், பொது இடத்தில் மது குடித்ததை கண்டறிந்து அவரை கைது செய்தனர்.

2 கிலோ புகையிலை பறிமுதல்


ஆனைமலை எஸ்.ஐ., முருகநாதன் மற்றும் போலீசார், ரோந்து சென்றனர். அப்போது, கடை அருகே தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனைக்காக வைத்து இருந்த, சரளப்பதியை சேர்ந்த லட்சுமி, 65, என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து, இரண்டு கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us