/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பவானி ஆற்றில் குதித்தவரை காப்பாற்றிய போலீஸ்
/
பவானி ஆற்றில் குதித்தவரை காப்பாற்றிய போலீஸ்
ADDED : ஜன 31, 2025 11:56 PM
மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவில் அருகே பவானி ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றவரை, லைப் கார்ட்ஸ் போலீசார் ஆற்றில் குதித்து காப்பாற்றினர்.
கோவை துடியலுாரை சேர்ந்தவர் சண்முகம்,48. இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் 4 வயதில் பெண் குழந்தை உள்ளது. கடந்த ஒரு வார காலமாக கணவன், மனைவி இடையே குடும்ப தகராறு இருந்து வந்துள்ளது.
நேற்று மதியம் சண்முகம், மேட்டுப்பாளையம் தேக்கம்பட்டி அருகே உள்ள வனபத்ரகாளியம்மன் கோவிலுக்கு வந்தார். சாமி தரிசனம் செய்துவிட்டு, கோவிலுக்கு அருகில் உள்ள பவானி ஆறு பாலத்தின் தடுப்பு சுவர் மேல் ஏறி, திடீரென ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றார்.
அப்போது அப்பகுதியில் சிறப்பு எஸ்.ஐ.,ராஜன் தலைமையிலான லைப் கார்ட்ஸ் போலீசார் ரோந்து வந்த நிலையில், உடனடியாக ஆற்றில் குதித்து, சண்முகத்தை காப்பாற்றினர். பின் பரிசல் வாயிலாக அவரை கரைக்கு கொண்டு வந்தனர். இதுகுறித்து, மேட்டுப்பாளையம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.