/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
போலீசாரின் சேவை புனிதமானது; ரயில்வே போலீஸ் டி.ஜி.பி., பேச்சு
/
போலீசாரின் சேவை புனிதமானது; ரயில்வே போலீஸ் டி.ஜி.பி., பேச்சு
போலீசாரின் சேவை புனிதமானது; ரயில்வே போலீஸ் டி.ஜி.பி., பேச்சு
போலீசாரின் சேவை புனிதமானது; ரயில்வே போலீஸ் டி.ஜி.பி., பேச்சு
ADDED : ஜூலை 08, 2025 10:11 PM

கோவை; ''மருத்துவர்களின் சேவையை போல், போலீசாரின் சேவையும் புனிதமானது,'' என ரயில்வே போலீஸ் டி.ஜி.பி., வன்னிய பெருமாள் பேசினார்.
தமிழக போலீஸ் இரண்டாம் நிலை பயிற்சி போலீசாருக்கான பயிற்சி, கடந்த ஏழு மாதங்களாக கோவை பயிற்சி பள்ளியில் நடந்தது.இதில் மதுரையில் இருந்து 100 பேர், திருவண்ணாமலையில் இருந்து 75 பேர் மற்றும் கரூரில் இருந்து 8 பேர் என மொத்தம் 183 பேர் பயிற்சி பெற்றனர்.இதற்கான பயிற்சி நிறைவு அணி வகுப்பு விழா நேற்று மாலை, அவிநாசி சாலையில் உள்ள போலீஸ் பயிற்சி பள்ளி மைதானத்தில் நடந்தது.
போலீஸ் பயிற்சி பள்ளி முதல்வர் குணசேகரன் வரவேற்றார். தமிழக ரயில்வே போலீஸ் டி.ஜி.பி., வன்னிய பெருமாள் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, பயிற்சி நிறைவு அணி வகுப்பை ஏற்றார். சிறப்பாக செயல்பட்ட பயிற்சி போலீசாருக்கு பதக்கம், சான்றிதழ்கள் வழங்கினார்.
டி.ஜி.பி., வன்னிய பெருமாள் பேசுகையில், ''போலீஸ் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்றவர்கள் பெரிய இடத்துக்கு சென்றுள்ளனர். போலீஸ் சேவை என்பது மருத்துவ சேவை போல் புனிதமானது.
அவசர காலத்தில் மக்களுக்கு உதவும் சேவையை போலீசார் செய்கின்றோம். போலீசார் இன்றி சமூக பொருளாதாரம் இல்லை எனும் நிலை ஏற்படும் வகையில், போலீசார் பணியாற்ற வேண்டும்.
அடுத்து வரும் தலைமுறையினருக்கு, எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும். பயிற்சி பெற்ற அனைவரும் சிறப்பாக பணியாற்றி, வாழ்க்கையில் பெரிய இடத்துக்கு செல்ல வேண்டும்,'' என்றார்.