/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'சந்தேக நபர்கள் குறித்து போலீசாருக்கு தகவல் தர வேண்டும்'
/
'சந்தேக நபர்கள் குறித்து போலீசாருக்கு தகவல் தர வேண்டும்'
'சந்தேக நபர்கள் குறித்து போலீசாருக்கு தகவல் தர வேண்டும்'
'சந்தேக நபர்கள் குறித்து போலீசாருக்கு தகவல் தர வேண்டும்'
ADDED : அக் 15, 2025 11:57 PM

மேட்டுப்பாளையம்: சிறுமுகை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் திருட்டு, கொலை, கொள்ளை நடக்காமல் இருக்க பொதுமக்கள் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து போலீசார் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இதுகுறித்து, சிறுமுகை போலீஸ் இன்ஸ்பெக்டர் அம்பிகா கூறியதாவது:-
குடியிருப்பு பகுதிகள், தோட்டத்து சாலைகள், முதியவர்கள் குடியிருக்கும் வீடுகளில் சி.சி.டி.வி., கேமராக்கள் பொருத்த வேண்டும். இரவு நேரங்களில் வீட்டை சுற்றி வளர்ப்பு நாய்கள் வைத்திருக்க வேண்டும். வெளியூர் போகும் சமயங்களில் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தால், இரவு நேரங்களில் தங்கள் வீடுகள் காவல் துறையால் கண்காணிக்கப்படும். விலையுயர்ந்த நகைகள் மற்றும் அதிகமான பணத்தை வீட்டில் வைக்காமல் வங்கிகளில் பாதுகாப்பாக வைக்க வேண்டும். இரவு நேரங்களில் யாரேனும் வீட்டின் கதவை தட்டினால் சந்தேகம் ஏற்பட்டால் அருகில் இருப்பவர்களுக்கு போன் மூலம் தொடர்பு கொண்டு அவர்களை வரவைத்து பாதுகாப்பு ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.
அவசர காலங்களில் 100 எண்ணை தொடர்பு கொள்ளவும். குடியிருப்பு பகுதிகளில் இரவு வாட்ச்மேன் போட்டு பாதுகாக்கவும்.
பகல் மற்றும் இரவு நேரங்களில் சந்தேகப்படும்படியாக யாரேனும் நடமாடினால் காவல் நிலையத்திற்கு தகவல் தரவும். சாணை பிடிக்க வருவோர், போர்வை வியாபாரி, ஸ்டவ் ரிப்பேர் செய்வோர் ஆகியோரிடத்தில் கவனமாக இருக்கவும். இவ்வாறு அவர் கூறினார்.