/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
திறந்தவெளியில் மது அருந்தும் கலாசாரம் போலீசார் நடவடிக்கை எடுக்கணும்
/
திறந்தவெளியில் மது அருந்தும் கலாசாரம் போலீசார் நடவடிக்கை எடுக்கணும்
திறந்தவெளியில் மது அருந்தும் கலாசாரம் போலீசார் நடவடிக்கை எடுக்கணும்
திறந்தவெளியில் மது அருந்தும் கலாசாரம் போலீசார் நடவடிக்கை எடுக்கணும்
ADDED : ஜன 17, 2025 11:41 PM
பொள்ளாச்சி,; பொள்ளாச்சி அருகே, குடும்பத்தாருடன் சுற்றுலா வரும் ஆண்கள் சிலர், எவரையும் பொருட்படுத்தாமல் திறந்தவெளியில் மது அருந்துவதால் அதிருப்தி ஏற்படுகிறது.
இன்றைய காலகட்டத்தில், மதுவில் மயங்குவோர் அதிகம். அதிலும், கடந்த சில ஆண்டுகளாக மது பழக்கத்திற்கு ஆளாகும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. உற்சாக கொண்டாட்டம், துக்க நிகழ்ச்சி, பொழுதுபோக்கு என எந்தவொரு நிகழ்விலும் மது முக்கிய விருந்தாளியாகி விட்டது.
மதுக்கடைக்கு செல்ல இளைஞர்கள் தயக்கம் காட்டிய காலம் மாறி, வயது வித்தியாசமின்றி பலரும் டாஸ்மாக் மதுக்கடை வாசலில் தவம் கிடப்பதை, பொள்ளாச்சி நகர் மற்றும் சுற்றுப்பகுதியில் காண முடிகிறது.
காணும் பொங்கலையொட்டி, பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மக்கள், ஆழியாறு, வால்பாறை உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களுக்கு வந்தனர். மகிழ்ச்சியை வெளிக்காட்டும் வகையில் பலர், குடும்பத்தாருடன் கார் மற்றும் பைக்குகளில் வந்த நிலையில் 'டாஸ்மாக்' கடைகளுக்கு செல்வதையும் தவிர்க்கவில்லை.
அதேநேரம், ஆங்காங்கே, உணவு உட்கொள்ள கார்களை நிறுத்தினர். அப்போது, குடும்பத்தாருடன் வந்த ஆண்கள், திறந்தவெளியில் மது குடித்ததை காண முடிந்தது. இதனை அவ்வழியே சென்ற கிராம மக்கள் அதிருப்தி அடைந்து, முகம் சுளித்தவாறு கடந்து சென்றனர்.
தன்னார்வலர்கள் கூறியதாவது:
பொள்ளாச்சி நகரில், மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதிகளில் ஒன்றுக்கும் மேற்பட்ட மதுக்கடைகள் செயல்படுகின்றன. இதற்கு யாரும் எதிர்ப்பு தெரிவிப்பதில்லை. அதேபோல, மது அருந்திவிட்டு வாகனங்களை இயக்கக் கூடாது. இந்த விதிகளும் காற்றில் பறக்கின்றன.
சமீபகாலமாக, ஆழியாறு, வால்பாறை உள்ளிட்ட சுற்றுலாத்தலங்களில், குடும்பத்தாருடன் வரும் ஆண்கள், மது அருந்துவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். பெண்கள், குழந்தைகள் உடனிருந்தும் இத்தகைய செயலில் ஈடுபடுகின்றனர். பாரபட்சமின்றி, போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.