/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
போலீஸ் ஸ்டேஷன் முற்றுகை விவசாயிகள் போராட்டத்தால் பரபரப்பு
/
போலீஸ் ஸ்டேஷன் முற்றுகை விவசாயிகள் போராட்டத்தால் பரபரப்பு
போலீஸ் ஸ்டேஷன் முற்றுகை விவசாயிகள் போராட்டத்தால் பரபரப்பு
போலீஸ் ஸ்டேஷன் முற்றுகை விவசாயிகள் போராட்டத்தால் பரபரப்பு
ADDED : ஜூன் 20, 2025 01:45 AM

பொள்ளாச்சி:பொள்ளாச்சி அருகே, தென்னை மரத்தில் கள் இறக்கிய விவசாயியை போலீசார் கைது செய்ததையடுத்து, விவசாயிகள் சங்கத்தினர், போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகத்தில், கள் இறக்கி விற்பனை செய்ய அனுமதிக்க வேண்டும் என, தென்னை விவசாயிகள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை இல்லை. இந்நிலையில், பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில் அனுமதியின்றி விற்பனை செய்யும் கள்ளை பறிமுதல் செய்து, விவசாயிகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்கின்றனர்.
இந்நிலையில், நேற்று தேவம்பாடிவலசு பகுதியை சேர்ந்த விவசாயி கணேஷ்,70, என்பவரது தோட்டத்தில் தென்னை மரத்தில் கள் இறக்கி விற்பனை செய்ததாக போலீசார் கைது செய்து, 10 லிட்டர் கள்ளை பறிமுதல் செய்தனர்.
இந்த தகவலை அறிந்த விவசாயிகள், நாராயணசாமி நாயுடு விவசாயிகள் சங்கத்தினர், வடக்கிபாளையம் போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, அவர் ஸ்டேஷன் பெயிலில் விடுவிக்கப்பட்டதால், போராட்டத்தை கைவிட்டனர்.
நாராயணசாமி நாயுடு விவசாயிகள் சங்கத்தின் மாநில கொள்கை பரப்பு செயலாளர் முருகானந்தம் கூறியதாவது:
கடந்த, 2009ம் ஆண்டு முதல், கள் இறக்க அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை இல்லை. கள் விற்கும் விவசாயியை, தீவிரவாதி போல கைது செய்வது கண்டிக்கத்தக்கது.
கள்ளுக்கு அனுமதி கொடுத்தால் விவசாயிகள் வாழ்வு செழிப்படையும். டாஸ்மாக் கடை மற்றும் பார் திறக்க அனுமதி கொடுத்தால் முதல்வர், அமைச்சர், எம்.எல்.ஏ.,க்கள் என அனைவரும் சம்பாதிக்க முடியும்.
விவசாயிகளை கைது செய்யும் செயல்களில் ஈடுபட்டால் போலீஸ் ஸ்டேஷன் முற்றுகை உள்ளிட்ட தொடர் போராட்டங்களில் ஈடுபடுவோம்.
இவ்வாறு, கூறினர்.