/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குற்ற சம்பவங்களை தடுக்க போலீசார் கண்காணிப்பு
/
குற்ற சம்பவங்களை தடுக்க போலீசார் கண்காணிப்பு
ADDED : அக் 24, 2024 09:15 PM

பொள்ளாச்சி- தீபாவளி பண்டிகையையொட்டி, பொதுமக்கள் குடும்பத்துடன் புத்தாடைகள் வாங்க வருவதால், போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ஹிந்துக்களின் முக்கிய பண்டிகையான தீபாவளி, வரும், 31ம் தேதி கொண்டாடப்படுகிறது. இன்னும், 5 நாட்களே உள்ளதால், பொதுமக்கள் புத்தாடைகள் மற்றும் பொருட்கள் வாங்க ஆர்வம் காட்டுகின்றனர்.
துணிக்கடைகள் அதிகம் நிறைந்துள்ள கிழக்கு போலீஸ் ஸ்டேஷன் ரோடு, கடைவீதி, கோவை ரோட்டில் பொதுமக்கள் குடும்பத்துடன் கடைகளுக்கு செல்கின்றனர். மக்கள் கூட்டம் அதிகமாக வருவதையடுத்து போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
போலீசார் கூறியதாவது:
தீபாவளி பண்டிகையையொட்டி, மக்கள் கூட்டமாக வருவதால் கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக, 'வாட்ச் டவர்' அமைக்கப்பட்டுள்ளது. கிழக்கு போலீசார், ஆயுதப்படை போலீசார், போக்குவரத்து போலீசார் இணைந்து கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது.
மேலும், சாதாரண உடைகளில் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். திருட்டு, குற்ற சம்பவங்களை கட்டுப்படுத்த இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. திருடர்களிடம் இருந்து பாதுகாப்பாக இருக்க ஒலிபெருக்கி வாயிலாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது.
இவ்வாறு, கூறினர்.