ADDED : ஜன 01, 2024 11:03 PM

அ நிறம் | அளவு
கிணத்துக்கடவு:பொள்ளாச்சி - கோவை தேசிய நெடுஞ்சாலையில், கிணத்துக்கடவு பகுதியில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு, பைக் ரேஸ், செல்பி எடுப்பது, கேக் வெட்டி கொண்டாடுதலில் இளைஞர்கள் ஈடுபட்டனர்.
சிலர், குடி போதையில், மேம்பாலத்தில் சென்று ஆங்கில புத்தாண்டை கொண்டாட முயற்சித்தனர். அதனால், போலீசார் மேம்பாலத்தின் இருபக்கத்திலும் டிவைடர்கள் வைத்து அடைத்தனர்.
கோவையில் இருந்து பொள்ளாச்சி நோக்கி வரும் வாகனம் மற்றும் பொள்ளாச்சியில் இருந்து கோவை சென்ற வாகனங்கள் அனைத்தும், சர்வீஸ் ரோடு வழியாக அனுப்பப்பட்டது. மேலும் கிணத்துக்கடவின் முக்கிய பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு அசம்பாவிதங்கள் ஏற்படுவதை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் தடுத்தனர்.
