வதந்தி தகவலை நம்பாதீங்க எச்சரிக்கை செய்யும் போலீசார்
வதந்தி தகவலை நம்பாதீங்க எச்சரிக்கை செய்யும் போலீசார்
ADDED : ஜன 24, 2026 04:45 AM
கிணத்துக்கடவு: மொபைல்போனில் வரும் அழைப்பால், போன் வெடித்து சிதறுவதாக 'வாட்ஸ்அப்'ல் உலா வரும் ஆடியோ பதிவு வைரலாகி வருகிறது.
மக்களின் அன்றாட தேவைகளில் ஒன்றாகி விட்டது மொபைல்போன். மொபைல்போன் வாயிலாக 'டிஜிட்டல்' பண பரிமாற்றம் நடப்பதால், ஸ்கேம் அழைப்புகள் வருகிறது. இதை நம்பி, பலரும் பணத்தை இழக்கின்றனர்.
தற்போது, புதிதாக சமூக வலைதளமான 'வாட்ஸ்அப்'ல், இரண்டு ஆடியோ பதிவுகள் வைரலாகி வருகிறது. அதில், 'ஒரு நபர் தூத்துக்குடியில் இருந்து பேசுவதாகவும், அப்பகுதி மக்களுக்கு மொபைல்போனில் 'கஸ்டமர் கேர்' அழைப்புகள், நான்கு முதல் ஐந்து முறை வந்ததாகவும், இதை அட்டென்ட் செய்தால் சிறிது நேரத்தில் மொபைல்போன் வெடித்து சிதறியதாகவும் கூறினார். இதனால் தூத்துக்குடி பகுதியில், உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் ஆடியோ பதிவு வெளியானது.
மற்றொரு பதிவில், ஆறு இலக்கம் மற்றும் 13 இலக்க எண்களில் இருந்து வரும் அழைப்புகளை அட்டென்ட் செய்தால், மொபைல்போன் வெடித்து சிதறுகிறது, என, இருந்தது.
இதுகுறித்து போலீசார் கூறியதாவது:
ஸ்கேம் அழைப்புகளை அட்டென்ட் செய்தால் மொபைல்போன் வெடித்து சிதறுவது பொய்யான தகவல். ஸ்கேம் அழைப்பு குறித்து வாட்ஸ்அப்பில் ஆடியோ பதிவு வந்தால் மக்கள் நம்ப வேண்டாம் என்றனர்.
மேலும், பொதுமக்களுக்கு ஸ்கேம் அழைப்புகள் மற்றும் பணம் பறிக்கும் முயற்சியில் அடையாளம் தெரியாத நபர்கள் போன் செய்தால், உடனடியாக சைபர் கிரைம் போலீசில் புகார் அளிக்க வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.
