/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பவானி ஆற்றில் குளித்தால் நடவடிக்கை; போலீசார் எச்சரிக்கை
/
பவானி ஆற்றில் குளித்தால் நடவடிக்கை; போலீசார் எச்சரிக்கை
பவானி ஆற்றில் குளித்தால் நடவடிக்கை; போலீசார் எச்சரிக்கை
பவானி ஆற்றில் குளித்தால் நடவடிக்கை; போலீசார் எச்சரிக்கை
ADDED : அக் 22, 2025 10:09 PM
மேட்டுப்பாளையம்: -: மழை காரணமாக பவானி ஆற்றில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் ஆற்றில் குளிக்க, துணி துவைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால் மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் குளம், குட்டைகள் நிரம்பி தண்ணீர் வெளியேறி வருகிறது. இந்த தண்ணீர் பவானி ஆற்றில் கலக்கிறது. மேலும் பவானி ஆற்றில் பில்லூர் அணையில் இருந்தும் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. பில்லூர் அணைக்கு நீலகிரி மாவட்டம் அப்பர் பவானி, அவிலாஞ்சி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தண்ணீர் வருகிறது. இதனால் பவானி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
இதுகுறித்து, மேட்டுப்பாளையம் போலீசார் கூறுகையில், பவானி ஆற்றில் குளிக்க, துணி துவைக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. அத்துமீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதுதவிர பவானி ஆற்றின் ஆபத்தான பகுதிகளில் லைப் காட்ஸ் போலீஸ் பிரிவினர், 24 மணி நேரமும் ரோந்து செல்கின்றனர், என்றனர்.--

