/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இனி 24 மணி நேரமும் போலீசார் பைக் ரோந்து; திட்டத்தை துவக்கினார் கமிஷனர்
/
இனி 24 மணி நேரமும் போலீசார் பைக் ரோந்து; திட்டத்தை துவக்கினார் கமிஷனர்
இனி 24 மணி நேரமும் போலீசார் பைக் ரோந்து; திட்டத்தை துவக்கினார் கமிஷனர்
இனி 24 மணி நேரமும் போலீசார் பைக் ரோந்து; திட்டத்தை துவக்கினார் கமிஷனர்
ADDED : ஜன 14, 2025 11:57 PM

கோவை; மாநகர பகுதிகளை 24 மணி நேரமும் கண்காணிக்கும் வகையில், ரோந்து போலீசார் திட்டத்தை போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர் துவக்கி வைத்தார்.
மாநகர பகுதிகளில் குற்றத்தடுப்பு நடவடிக்கை, பொது மக்கள் பாதுகாப்பு, பள்ளி குழந்தைகள் நலன் ஆகியவற்றை பாதுகாக்கும் வகையில் மாநகரில் 24 மணி நேரம் இரு சக்கர வாகன ரோந்து திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
இத்திட்டத்தில், 52 இரு சக்கர வாகனங்களில் தலா இரண்டு போலீசார், சுழற்சிமுறையில், 24 மணி நேரமும் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர்.
இவர்கள், பள்ளி, கல்லுாரிகள் பகுதிகள், குற்றம் நடக்கும் இடங்கள், வணிக நிறுவனங்கள், வழிபாட்டு தளங்கள் என பல்வேறு இடங்களை கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
திட்டத்தை துவக்கி வைத்த போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர் பேசுகையில், ''24 மணி நேரமும் ரோந்து பணியில் ஈடுபடும் வகையில் 'பீட் ஆபிசர்ஸ் சிஸ்டம்' கொண்டு வரப்பட்டுள்ளது. ஒவ்வொரு பீட் போலீசாரும், அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் ரோந்து, தணிக்கையில் ஈடுபடுவர்.
இதில் போக்கிரி தணிக்கை, முதியோர் கண்காணிப்பு போன்ற திட்டங்களும் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. மாநகரில் புதிதாக இணைக்கப்பட்ட ஸ்டேஷன்களுக்கு, உட்பட்ட பகுதிகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்தும் வகையில், இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது,'' என்றார்.