/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மதுவுக்கு அடிமையான 14 வயது சிறுவன் அறிவுரை கூறி அரவணைத்த போலீஸ்
/
மதுவுக்கு அடிமையான 14 வயது சிறுவன் அறிவுரை கூறி அரவணைத்த போலீஸ்
மதுவுக்கு அடிமையான 14 வயது சிறுவன் அறிவுரை கூறி அரவணைத்த போலீஸ்
மதுவுக்கு அடிமையான 14 வயது சிறுவன் அறிவுரை கூறி அரவணைத்த போலீஸ்
ADDED : டிச 12, 2025 05:18 AM
காரமடை: காரமடை அருகே 14 வயது சிறுவன் மதுவுக்கு அடிமையான நிலையில், அவனுக்கு போலீசார் அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.
காரமடை அருகே ஒரு கிராமத்தை சேர்ந்த 14 வயது பள்ளி சிறுவன். இவனது பெற்றோர் கூலி தொழிலாளிகள். கடந்த 4 நாட்களுக்கு முன் அச்சிறுவன் வீட்டை வீட்டு வெளியேறி காணாமல் போய்விட்டான்.
பெற்றோர், காரமடை போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தனர். போலீசார் மற்றும் சிறுவனின் பெற்றோர், உறவினர் மற்றும் பல்வேறு இடங்களில் தேடினர். ஆனால் சிறுவன் கிடைக்கவில்லை.
இதனிடையே நேற்று முன் தினம் இரவு சிறுவன் மீண்டும் வீடு திரும்பினான். ஆனால் அவன் மதுபோதையில் இருந்துள்ளான்.
இது அவனுக்கு புதிது இல்லை என்பதால், இனி போலீஸ் தான் சிறுவனை திருத்த வேண்டும் என நினைத்த பெற்றோர், அவனை காரமடை போலீஸ் ஸ்டேஷன் அழைத்து வந்தனர்.
சிறுவனிடம் எங்கு சென்றாய் என போலீசார் கேட்டபோது, அவன், ஊட்டிக்கு நண்பர்களுடன் சென்றேன். மது அருந்தினேன், பீடியும் குடித்தேன் என வெளிப்படையாக கூறினான்.
அதிர்ச்சியடைந்த போலீசார் சிறுவனிடம், மதுவின் தீமைகள் குறித்து எடுத்துரைத்தனர். பின், மது அருந்திவிட்டு சுய அறிவு இழக்கும் போது, கொலை, கொள்ளை சம்பவங்களில் ஈடுபட வாய்ப்புள்ளது. அப்படி நடக்கும் போது வாழ்க்கை சீரழிந்துவிடும்.
சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு செல்வாய். இதனால் பெற்றோரை இழந்துவிடுவாய், இது தேவையா என அறிவுரைகளை பக்குவமாய் எடுத்துரைத்தனர். பெற்றோரின் கண்ணீரை கண்ட சிறுவன், இனி திருந்தி வாழ்வேன் என்றான்.
மேலும், காரமடை போலீசார் சிறுவனின் பெற்றோரிடம் எக்காரணத்தை கொண்டும் சிறுவனை பள்ளிக்கு அனுப்பாமல் இருக்கக்கூடாது. பள்ளிக்கு செல்லவில்லை என்றால் சொல்லுங்கள்.
நாங்கள் வந்து அனுப்பி வைக்கிறோம். படிப்பு முக்கியம் என அறிவுறுத்தி சிறுவனை பெற்றோருடன் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.---

