/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நாய் பயிற்சியாளரை ஜாதி பெயர் சொல்லி திட்டிய போலீஸ்காரர் சிறையில் அடைப்பு
/
நாய் பயிற்சியாளரை ஜாதி பெயர் சொல்லி திட்டிய போலீஸ்காரர் சிறையில் அடைப்பு
நாய் பயிற்சியாளரை ஜாதி பெயர் சொல்லி திட்டிய போலீஸ்காரர் சிறையில் அடைப்பு
நாய் பயிற்சியாளரை ஜாதி பெயர் சொல்லி திட்டிய போலீஸ்காரர் சிறையில் அடைப்பு
ADDED : ஆக 10, 2025 02:36 AM

வடவள்ளி : பொம்மணம்பாளையம், லட்சுமி நகரை சேர்ந்தவர் சிவஞானம், 33. இவர், மருதமலை அடிவாரம், ஐ.ஓ.பி.காலனியில், ரவிச்சந்திரன் என்பவருக்கு சொந்தமான, 'வெஸ்டர்ன் காட்ஸ் கெனல் பார்ம்' என்ற வளர்ப்பு நாய் பயிற்சி மையத்தில் வேலை பார்க்கிறார்.
2021ம் ஆண்டு, ரவிச்சந்திரனின் நண்பரான திருநெல்வேலி மருதவிநாயகம் என்பவர், சிவஞானத்துக்கு பழக்கமானார். அவர் நீலகிரி மாவட்டம், நெலாக்கோட்டை போலீஸ் ஸ்டேஷனில் போலீஸ்காரராக வேலை செய்கிறார்.
நேற்றுமுன்தினம், நாய் பயிற்சி மையத்திற்கு சென்ற மருதவிநாயகம், சிவஞானத்திடம் பேசிவிட்டு, அங்கிருந்த, 2 நாய்களை தான் எடுத்துச் செல்வதாக கூறியுள்ளார்.
உரிமையாளர் ரவிச்சந்திரன் கூறாமல் தர மாட்டேன் என, சிவஞானம் தெரிவித்துள்ளார். கோபமடைந்த மருதவிநாயகம், சிவஞானத்தை திட்டி மிரட்டியுள்ளார்.
சிவஞானம் போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் மருதவிநாயகத்திடம் விசாரித்துள்ளனர். மருதவிநாயகம் ஆத்திரமாகி, சிவஞானத்தின் நண்பரான பிராங்க்ளின் என்பவரை வாட்ஸ்அப்பில் தொடர்பு கொண்டு, சிவஞானத்தை ஜாதி பெயர் சொல்லி திட்டி, மிரட்டல் விடுத்துள்ளார். 'எந்த போலீஸ் உயர் அதிகாரிகளிடம் கூறினாலும் என்னை எதுவும் செய்ய முடியாது' என்றும் கூறி, ஆடியோ மெசேஜ் அனுப்பியுள்ளார்.
பிராங்ளின் அதை சிவஞானத்துக்கு 'பார்வேட்' செய்தார். சிவஞானம் அந்த ஆடியோ ஆதாரத்துடன், வடவள்ளி போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். போலீசார் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து, மருதவிநாயகத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர்.