UPDATED : நவ 18, 2026 12:00 AM
ADDED : நவ 17, 2026 11:10 PM
அ நிறம் | அளவு
பந்தலுார்: நீலகிரி மாவட்டம், பந்தலுார் அருகே ராக்வுட் எஸ்டேட் மருத்துவமனை காவலாளியாக பணியாற்றி வருபவர் பாண்டி, 55.
நேற்று இரவு இவர் வீட்டிலிருந்து மருத்துவமனை செல்லும்போது, தேயிலை தோட்டத்தில் நின்றிருந்த யானை கூட்டம் இவரை தாக்கியுள்ளது. அதில் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
வனத்துறையினர் மற்றும் போலீசார் விசாரிக்கின்றனர். அப்பகுதியில் யானை கூட்டம் நிற்பதால், மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
