sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 10, 2026 ,மாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

தொழிலாளியை தாக்கிய போலீஸ்காரர் 'சஸ்பெண்ட்'

/

தொழிலாளியை தாக்கிய போலீஸ்காரர் 'சஸ்பெண்ட்'

தொழிலாளியை தாக்கிய போலீஸ்காரர் 'சஸ்பெண்ட்'

தொழிலாளியை தாக்கிய போலீஸ்காரர் 'சஸ்பெண்ட்'


ADDED : நவ 06, 2024 02:15 AM

Google News

ADDED : நவ 06, 2024 02:15 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேட்டுப்பாளையம்:கோவை மாவட்டம், சிறுமுகை அருகே ஆலங்கொம்பு பகுதியை சேர்ந்தவர் வேல்முருகன், 47; கூலித் தொழிலாளி. இவரது மகன் கார்த்திக், 23; பால் கறந்து விற்கும் வேலை செய்து வந்தார். மாடு உரிமையாளரான பெண் ஒருவரிடம் கார்த்திக் கடன் வாங்கினார்.

அதை திரும்ப கொடுக்காததால் கார்த்திக்கிற்கு கடன் கொடுத்த பெண் நேற்று முன்தினம் சிறுமுகை போலீசில் புகார் அளித்தார். விசாரிக்க கார்த்திக் வீட்டிற்கு, போலீஸ்காரர் ரஞ்சித் சென்றார்.

கார்த்திக் வீட்டில் இருந்த அவரது தந்தை வேல்முருகனிடம், போலீசார் விசாரித்தனர். வேல்முருகன், 'கார்த்திக் இங்கு இல்லை. எங்கு சென்றார் என தெரியவில்லை' என்று கூற, வீட்டிற்குள் சென்று பார்க்க வேண்டும் என போலீசார் கேட்டனர். வேல்முருகன் இதற்கு அனுமதிக்கவில்லை. இதனால் இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

ஆத்திரமடைந்த போலீஸ்காரர் ரஞ்சித், வேல்முருகனை வீட்டு வாசலில் இருந்து, வலுக்கட்டாயமாக ரோட்டிற்கு இழுத்து வந்து அவரை தாக்கினார். இதை அவ்வழியாக சென்றவர்கள் வீடியோ எடுத்து, வலைதளங்களில் பரப்பினர். இதையடுத்து, ரஞ்சித்தை கோவை ரூரல் எஸ்.பி. கார்த்திகேயன், சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.






      Dinamalar
      Follow us