/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
போலியோ விழிப்புணர்வு மாரத்தான் போட்டி
/
போலியோ விழிப்புணர்வு மாரத்தான் போட்டி
ADDED : டிச 01, 2024 11:42 PM

மேட்டுப்பாளையம்; காரமடை அருகே ஸ்ரீ விநாயகா வித்யாலயா பள்ளி மற்றும் காரமடை ரோட்டரி சங்கம் சார்பில், போலியோ நோய் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும், அதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி உதவி செய்ய நிதி சேகரிக்கும் வகையிலும் மாரத்தான் போட்டி நேற்று நடந்தது.
பள்ளி வளாகத்தில் இருந்து தொடங்கிய மாரத்தான் போட்டியை, கோவை மாவட்ட ரோட்டரி சங்க ஆளுநர் சுரேஷ்பாபு, காரமடை ரோட்டரி சங்கத் தலைவரும், பள்ளி தாளாளருமான சோமசுந்தரம் ஆகியோர் கொடி அசைத்து துவக்கி வைத்தனர்.
பள்ளி நிர்வாக அலுவலர் நிர்மலா தேவி முன்னிலை வகித்தார். இதில் 10, கிலோ மீட்டர், 5 கிலோ மீட்டர், 3 மற்றும் 2 கிலோ மீட்டர் என தனித்தனியாக மாரத்தான், வாக்கத்தான் போட்டிகள் நடைபெற்றன. மாற்றுத்திறனாளிகளுக்காக நடை போட்டியும் நடைபெற்றது.
இந்த போட்டிகளில் சிறுவர்கள், பெரியவர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர். போட்டியில் வெற்றி பெற்ற நபர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. மேலும் இந்த போட்டியின் வாயிலாக பெறப்பட்ட நிதி, போலியோ நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படவுள்ளது.