ADDED : மார் 02, 2024 10:32 PM
அ நிறம் | அளவு
கோவை;சுந்தராபுரம் மதுக்கரை மார்க்கெட் ரோட்டில் உள்ள, 'தினமலர்' நாளிதழ் அலுவலகம் உட்பட, மாநகராட்சிக்கு உட்பட்ட, 351 இடங்களில் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம் நடக்கிறது.
மாநகராட்சி பகுதிகளில் உள்ள, 32 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், 45 நகர்ப்புற நல்வாழ்வு மையங்களுக்கு உட்பட பகுதிகளில், 327 போலியோ சொட்டு மருந்து முகாம்கள், ரயில்வே ஸ்டேஷன், பஸ் ஸ்டாண்ட் என, ஏழு இடங்களில் 'டிரான்ஸிட்' முகாம்கள், 14 நடமாடும் முகாம்கள், மூன்று பெரிய வணிக நிறுவனங்களில் என, 351 இடங்களில் முகாம்கள் நடக்கின்றன.
பிறந்த குழந்தை முதல், ஐந்து வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் தவறாமல், போலியோ சொட்டு மருந்து வழங்குமாறு, பெற்றோரை மாநகராட்சி நிர்வாகம் கேட்டுகொண்டுள்ளது.
