/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நாராயணசாமி நாயுடு நினைவு நாள் அரசியல் கட்சியினர் மலர் அஞ்சலி
/
நாராயணசாமி நாயுடு நினைவு நாள் அரசியல் கட்சியினர் மலர் அஞ்சலி
நாராயணசாமி நாயுடு நினைவு நாள் அரசியல் கட்சியினர் மலர் அஞ்சலி
நாராயணசாமி நாயுடு நினைவு நாள் அரசியல் கட்சியினர் மலர் அஞ்சலி
ADDED : டிச 22, 2025 05:31 AM

பெ.நா.பாளையம்: கோயில்பாளையம் அருகே உள்ள வையம்பாளையத்தில், உழவர் பெருந்தலைவர் மறைந்த நாராயணசாமி நாயுடு, 41ம் ஆண்டு நினைவு நாள் மலர் அஞ்சலியில், பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் பங்கேற்று, அஞ்சலி செலுத்தினர்.
அ.தி.மு.க., சார்பில், கவுண்டம்பாளையம் எம்.எல்.ஏ., அருண்குமார் தலைமையிலும், தி.மு.க., சார் பில், கோவை வடக்கு மாவட்ட தி.மு.க., செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையிலும், காங்.,சார்பில் வடக்கு மாவட்ட முன்னாள் தலைவர் மனோகரன், மாநகர் மாவட்ட தலைவர் விஜயகுமார் தலைமையிலும், அஞ்சலி செலுத்தினர். தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுசாமி மற்றும் விவசாயிகள் அஞ்சலி செலுத்தினர்.