தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ பொள்ளாச்சி மாவட்டம் உருவாக்கப்படும் ! அ.தி.மு.க. வேட்பாளர் ஜெயராமன் உறுதி 

பொள்ளாச்சி மாவட்டம் உருவாக்கப்படும் ! அ.தி.மு.க. வேட்பாளர் ஜெயராமன் உறுதி 

பொள்ளாச்சி மாவட்டம் உருவாக்கப்படும் ! அ.தி.மு.க. வேட்பாளர் ஜெயராமன் உறுதி 


ADDED : ஏப் 11, 2026 08:07 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 11, 2026 08:07 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பொள்ளாச்சி: ''சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும், பொள்ளாச்சியை தலைமையிடமாக கொண்டு மாவட்டம் உருவாக்கப்படும்,'' என, அ.தி.மு.க. வேட்பாளர் ஜெயராமன் தெரிவித்தார்.

பொள்ளாச்சி நகராட்சிக்கு உட்பட்ட பாலகோபாலபுரம் வீதியில், அ.தி.மு.க. வேட்பாளர் பொள்ளாச்சி ஜெயராமன், பிரசாரம் செய்தார். நகர செயலாளர் கிருஷ்ணகுமார் முன்னிலை வகித்தார். மாவட்ட ஜெ. பேரவை செயலாளர் விஜயகுமார், கவுன்சிலர் ஜேம்ஸ்ராஜா, மாவட்ட பிரதிநிதி அருணாச்சலம், மாவட்ட சிறுபான்மை பிரிவு இணை செயலாளர் ராஜ்கபூர், பொருளாளர் கனகராஜ் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.

பொள்ளாச்சி ஜெயராமன் பேசியதாவது:

ஆங்கிலேயர் காலத்தில், 1857ம் ஆண்டு உருவாக்கப்பட்ட பொள்ளாச்சி வருவாய் கோட்டத்தில் இருந்த திருப்பூர், 2008ம் ஆண்டு மாவட்டமாக அறிவிக்கப்பட்டது. தென்னை சார்ந்த பொருட்கள் உற்பத்தியில் மாநிலத்தில் முதன்மை பகுதியாக பொள்ளாச்சி உள்ளது.

கோவை மாவட்டத்தில் தலைமையிடத்தில் இருந்து கடைக்கோடி எல்லையில் ேஷக்கல் முடி எஸ்டேட், 125 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் திருமூர்த்தி மலை, 96 கி.மீ., தொலைவில் அமைந்துள்ளது.

எனவே, பொள்ளாச்சியை தலைமையிடமாக கொண்டு மாவட்டம் உருவாகும் போது, ேஷக்கல்முடி, திருமூர்த்தி பகுதி மக்கள், மாவட்ட அலுவலகத்தை எளிதில் அணுக முடியும். திட்டங்கள் உடனடியாக மக்களை சென்றடையும். இதற்காக மாவட்டம் உருவாக்க வேண்டும் என்பது பொதுமக்களிட் நீண்ட கால கோரிக்கையாக உள்ளது.

மாவட்டம் உருவாக்குவதற்கான அடிப்படை கட்டமைப்பு வசதிகள், அ.தி.மு.க. ஆட்சியில் மேம்படுத்தப்பட்டன. அதன்பின், மாவட்டம் உருவாக்க ஆக்கப்பூர்வ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. ஆட்சி மாற்றத்துக்கு பின், தி.மு.க. அரசு, பொள்ளாச்சி மாவட்டம் உருவாக எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது குறித்து பலமுறை வலியுறுத்தியும் எவ்வித பலனும் இல்லை.

தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்று முதல்வராக பழனிசாமி பொறுப்பேற்ற பின், பொள்ளாச்சியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்க உரிய முயற்சிகளை மேற்கொள்வேன்.

இவ்வாறு, பேசினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us