/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பொள்ளாச்சி பொறியியல் கல்லுாரி விண்வெளி பயிற்சியாளராக தேர்வு
/
பொள்ளாச்சி பொறியியல் கல்லுாரி விண்வெளி பயிற்சியாளராக தேர்வு
பொள்ளாச்சி பொறியியல் கல்லுாரி விண்வெளி பயிற்சியாளராக தேர்வு
பொள்ளாச்சி பொறியியல் கல்லுாரி விண்வெளி பயிற்சியாளராக தேர்வு
ADDED : ஜூலை 15, 2025 08:24 PM
பொள்ளாச்சி; பொள்ளாச்சி பொறியியல் கல்லுாரி, இஸ்ரோவின் பதிவு செய்யப்பட்ட விண்வெளி பயிற்சியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
பொள்ளாச்சி அருகே பூசாரிப்பட்டியில், பொள்ளாச்சி பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லுாரி செயல்படுகிறது. இந்த கல்லுாரி, 'இஸ்ரோவின் பதிவு செய்யப்பட்ட விண்வெளி பயிற்சியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
விண்வெளி கல்வியை ஊக்குவிக்கவும், மாணவர் சமூகத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்த அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.
தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், கல்வி நிறுவனங்களுடன் கை கோர்த்து தங்களது சொந்த கட்டமைப்பை உருவாக்குகின்றனர்.
அங்கு மாணவர்கள் விண்வெளி ஆசிரியர்களுடன் பதிவு செய்து புத்தகங்கள், ஆய்வக பணிகளை மேற்கொள்ள ஊக்குவிக்கப்படுகின்றனர். அதன்படி இக்கல்லுாரி அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக கல்லுாரி முதல்வர் தனபாலகிருஷ்ணன் தெரிவித்தார்.