/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பொள்ளாச்சி திருவிழா டிச., 22ல் துவக்கம்
/
பொள்ளாச்சி திருவிழா டிச., 22ல் துவக்கம்
ADDED : நவ 15, 2024 09:33 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொள்ளாச்சி; பொள்ளாச்சி தொழில்வர்த்தக சபை மற்றும் பல்வேறு அமைப்புகள் இணைந்து நடத்தும், பொள்ளாச்சி திருவிழா வரும் டிச., 22ம் தேதி முதல் ஒரு வாரம் நடக்கிறது. இதற்கான 'லோகோ' அறிமுக நிகழ்ச்சி திஷா பள்ளியில் நடந்தது.
தொழில் வர்த்தக சபை தலைவர் வெங்கடேஷ், விழா கமிட்டி தலைவர் ஆனந்தகுமார், சுற்றுலா வளர்ச்சித்துறையினர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
விழா, 'லோகோ' அறிமுகப்படுத்தப்பட்டு நிகழ்ச்சி குறித்து விளக்கப்பட்டது. மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடந்தது.