/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பொங்கல் பரிசுத்தொகையில் ஏமாற்றம் பொள்ளாச்சி எம்.எல்.ஏ., ஜெயராமன் காட்டம்
/
பொங்கல் பரிசுத்தொகையில் ஏமாற்றம் பொள்ளாச்சி எம்.எல்.ஏ., ஜெயராமன் காட்டம்
பொங்கல் பரிசுத்தொகையில் ஏமாற்றம் பொள்ளாச்சி எம்.எல்.ஏ., ஜெயராமன் காட்டம்
பொங்கல் பரிசுத்தொகையில் ஏமாற்றம் பொள்ளாச்சி எம்.எல்.ஏ., ஜெயராமன் காட்டம்
ADDED : ஜன 07, 2025 02:06 AM
பொள்ளாச்சி, ; தமிழகத்தில் பொங்கல் பரிசுத் தொகை வழங்கப்படாததால், மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர் என, எம்.எல்.ஏ., பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டம், கிணத்துக்கடவு அருகே மேட்டுப்பாளையம் கிராமத்தில், எம்.எல்.ஏ., மேம்பாட்டு நிதியில், புதிய பயணியர் நிழற்கூரை அமைக்கப்பட்டுள்ளது. இதனை எம்.எல்.ஏ., பொள்ளாச்சி ஜெயராமன், மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
அ.தி.மு.க., ஆட்சியில், பொங்கல் பரிசாக, 2019ல் ஆயிரம் ரூபாய், 2020ல், 2,500 ரூபாய் வழங்கப்பட்டது. அன்றைய சூழலில், மாநில அரசுக்கு வருமானம் குறைவாக இருந்தது.
தற்போது, தி.மு.க., ஆட்சியில், பல்வேறு துறைகளில், ஒவ்வொரு ஆண்டும், 40 ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் அதிகரித்துள்ளது. அதேநேரம், புதிதாக, 3.30 லட்சம் கோடி ரூபாய் கடன் பெறப்பட்டுள்ளது.
ஆனால், ஏழை, எளிய மக்களுக்கு பொங்கல் பரிசு வழங்கப்படாததால் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இதனைக்கண்டிக்கிறோம். இதுதவிர, தி.மு.க.,வைச் சேர்ந்தவர்களுக்கே பெருமளவு மகளிர் உரிமை தொகை வழங்கப்படுகிறது. மகளிர் உரிமைத் தொகை கிடைக்கப்பெறாத ஒரு கோடி பெண்கள் உள்ளனர். அவர்களுக்கு வழங்க வேண்டும். அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்தால் அனைத்து மக்களுக்கும் சமமாக, மகளிர் உரிமைத்தொகை கூடுதலாக வழங்கப்படும். தமிழகத்தில் பாலியல் வன்முறை, கொடூர கொலைகளை தடுக்கும் வகையில் நீதி கேட்போம்.
இவ்வாறு, அவர் கூறினார்.