sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

இரவில் செயல்படும் பொள்ளாச்சி நகராட்சி! எம்.எல்.ஏ., ஜெயராமன் குற்றச்சாட்டு 

/

இரவில் செயல்படும் பொள்ளாச்சி நகராட்சி! எம்.எல்.ஏ., ஜெயராமன் குற்றச்சாட்டு 

இரவில் செயல்படும் பொள்ளாச்சி நகராட்சி! எம்.எல்.ஏ., ஜெயராமன் குற்றச்சாட்டு 

இரவில் செயல்படும் பொள்ளாச்சி நகராட்சி! எம்.எல்.ஏ., ஜெயராமன் குற்றச்சாட்டு 


ADDED : ஜன 06, 2024 01:25 AM

Google News

ADDED : ஜன 06, 2024 01:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி;பொள்ளாச்சி நகராட்சி தலைவராக சியாமளாவும், அவரது கணவர் நவநீத கிருஷ்ணன் தி.மு.க., நகர செயலாளராகவும் உள்ளனர்.

கோட்டூர் ரோடு நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே எம்.எல்.ஏ., தொகுதி நிதியில் நிழற்கூரை அமைக்க பூமி பூஜை நடந்தது. அதில், பங்கேற்ற எம்.எல்.ஏ., பொள்ளாச்சி ஜெயராமன், நிருபர்களிடம் கூறியதாவது:

மாணவியர் வசதிக்காக நிழற்கூரை அமைக்க அனுமதி கோரப்பட்டது. இதற்கும் நகராட்சி தலைவரின் கணவர் தடுக்க முயற்சித்தார். மாவட்ட கலெக்டரிடம் அனுமதி பெற்று பூமி பூஜை நடத்தப்பட்டது.

தமிழகத்தில் அனைத்து நகராட்சிகளும் பகலில் செயல்படுகிறது. ஆனால், பொள்ளாச்சி நகராட்சி மட்டும் மாலை, 6:00 மணி முதல் இரவு, 12:00 மணிவரை செயல்படுகிறது. இந்த நேரத்தில் தான், பல விஷயங்கள் அங்கு நடக்கின்றன.

அதுவும், நகராட்சி தலைவர் கூட இல்லாத நேரத்தில், சம்பந்தமே இல்லாத நபர்கள் நகராட்சியை நடத்துகின்றனர். இதை அ.தி.மு.க., வன்மையாக கண்டிக்கிறது.

பொள்ளாச்சி நகரத்தில் புதியதாக கட்டடம் கட்ட வேண்டுமானால், 'டிமாண்ட்' வைக்கின்றனர். ஒவ்வொரு கட்டடத்துக்கும், இவ்வளவு தொகை கொடுத்தால் தான் அனுமதி என்பதால் பலரும் தயக்கம் காட்டுகின்றனர். சொத்து வரி பெயர் மாற்றத்துக்கும் லஞ்சம் தர வேண்டியுள்ளது. இது தரம் தாழ்ந்த செயலாக உள்ளது. அடிப்படை வசதிகளில் கவனம் செலுத்தாமல், ஊழல் செய்வதிலேயே குறியாக உள்ளனர்.

ஜோதிநகர் பகுதி மக்களுக்காக ரேஷன் கடை கட்டுவதற்கான இடத்தை, நகராட்சி தான் தேர்வு செய்து, மாவட்ட நிர்வாகத்துக்கு வழங்கியது. அதன்படி, டெண்டர் விடப்பட்டு பணிகள் துவங்குவதற்கு முன், தி.மு.க., நகராட்சி தலைவரின் கணவர் அதை தற்காலிகமாக நிறுத்தி வைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

மாவட்ட கலெக்டர் தொடர்பு கொண்டு இரு நாட்கள் பொறுங்கள்; பிரச்னையை தீர்த்து தருகிறோம் என கூறுகிறார். இதனால், இரு நாட்களுக்கு பின், அங்கு பூமி பூஜை நடத்தப்படும். மக்களுக்கான திட்டங்களில், அரசியல் பார்க்காமல் செயல்படுத்த முன்வர வேண்டும். எம்.எல்.ஏ., நிதி என்பது மக்கள் வரிப்பணம் தான் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.

அதிகாரிகள் வரல!

எம்.எல்.ஏ., கூறுகையில், ''கடந்த, 3ம் தேதி நடந்த நிகழ்ச்சியில் நகராட்சி அதிகாரிகள் பங்கேற்கவில்லை. இன்று (நேற்று) நடந்த பூஜைக்கும் நகராட்சி அதிகாரிகள் வரவில்லை. சேர்மன் வேலையை அவரது கணவர் தான் பார்க்கிறார். இது எல்லாம் மாறும்,'' என்றார்.








      Dinamalar
      Follow us