/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பொள்ளாச்சியை மாவட்டமாக அறிவிக்கணும்! அரசை வலியுறுத்தும் வக்கீல்கள் சங்கம்
/
பொள்ளாச்சியை மாவட்டமாக அறிவிக்கணும்! அரசை வலியுறுத்தும் வக்கீல்கள் சங்கம்
பொள்ளாச்சியை மாவட்டமாக அறிவிக்கணும்! அரசை வலியுறுத்தும் வக்கீல்கள் சங்கம்
பொள்ளாச்சியை மாவட்டமாக அறிவிக்கணும்! அரசை வலியுறுத்தும் வக்கீல்கள் சங்கம்
ADDED : ஏப் 21, 2025 09:41 PM

பொள்ளாச்சி, ; பொள்ளாச்சியை தலைமையிடமாக கொண்டு மாவட்டம் அறிவிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், என, வக்கீல்கள் சங்கத்தினர் சப்-கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
பொள்ளாச்சி மாவட்ட அறிவிப்பை வெளியிட வேண்டும் என, பல்வேறு தரப்பினரும் மாநில அரசை வலியுறுத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, நேற்று, பொள்ளாச்சியின் சிறப்பு அம்சங்களை சுட்டிக்காட்டி, வக்கீல்கள் சங்கத்தினர், சப்-கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
அதன்பின், நிருபர்களிடம் கூறியதாவது:
1857-ல், ஆங்கிலேயர்களால், பாலக்காடு மாவட்டத்தில் இருந்து பிரித்து, திருப்பூர், மடத்துக்குளம், உடுமலை, பல்லடம் ஆகிய பகுதிகளை உள்ளடக்கி பொள்ளாச்சி வருவாய் கோட்டம் உருவாக்கப்பட்டது.
அதன்பின், திருப்பூர் தனி மாவட்டமாக அறிவிக்கப்பட்டது. அதேநேரம், 50 ஆண்டுகளாக, பொள்ளாச்சியை தனி மாவட்டமாக அறிவிக்க மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இங்கு, 15 லட்சம் மக்கள் தொகை உள்ளது. வளர்ந்து வரும் ஒரு தொழில் நகரமாகும். பல கோடி ரூபாய் மதிப்பில், இளநீர், தென்னை சார் பொருட்கள், பிற மாநிலங்களுக்கும் வெளிநாட்டிற்கும் வர்த்தகம் செய்யப்படுகிறது.
பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, வால்பாறை, உடுமலை, மடத்துக்குளம் உள்ளிட்ட சட்டசபை தொகுதிகளை உள்ளடக்கி, பொள்ளாச்சியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் அறிவிக்க வேண்டும்.
குறிப்பாக, விவசாயிகள், வியாபாரிகள், வாக்காளர்கள், இளைய சமுதாயத்தினர் உள்ளிட்டவர்களளின் ஆலோசனைகள், கருத்துக்கள் பெற்று, அதற்கேற்ப பொள்ளாச்சியை மாவட்டமாக அறிவிக்கலாம்.
மடத்துக்குளம் மற்றும் உடுமலையை உள்ளடக்கி பழனி மாவட்டம் அறிவிக்க உள்ள செயல் நடைமுறை பல்வேறு சிக்கல்களை உண்டாக்கும். கடந்த நான்கு ஆண்டுகளில், ஆறு புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன. ஆனால், நீண்டகாலமாக பொள்ளாச்சியை மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை மட்டும் நிறைவேற்றப்படவில்லை.
பொள்ளாச்சியை மாவட்டமாக அறிவிக்கும் பட்சத்தில், மாவட்ட நீதிமன்றம் மற்றும் மாவட்ட அளவிலான நீதிமன்றங்கள் வாயிலாக அனைவருக்கும் நிறைவான, விரைவான நீதி கிடைக்கும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.