sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

பொள்ளாச்சி, உடுமலை தொகுதிகளில் பெண்கள் ராஜ்ஜியம்! இறுதி வாக்காளர் பட்டியல் 'ரிலீஸ்'

/

பொள்ளாச்சி, உடுமலை தொகுதிகளில் பெண்கள் ராஜ்ஜியம்! இறுதி வாக்காளர் பட்டியல் 'ரிலீஸ்'

பொள்ளாச்சி, உடுமலை தொகுதிகளில் பெண்கள் ராஜ்ஜியம்! இறுதி வாக்காளர் பட்டியல் 'ரிலீஸ்'

பொள்ளாச்சி, உடுமலை தொகுதிகளில் பெண்கள் ராஜ்ஜியம்! இறுதி வாக்காளர் பட்டியல் 'ரிலீஸ்'


ADDED : ஜன 07, 2025 06:46 AM

Google News

ADDED : ஜன 07, 2025 06:46 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நடப்பாண்டுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, வால்பாறை, உடுமலை, மடத்துக்குளம் ஆகிய ஐந்து சட்டசபை தொகுதியிலும், பெண் வாக்காளர்கள் அதிகம் உள்ளனர்.

தேர்தல் ஆணையம் அறிவுறுத்தலின்படி, வரைவு வாக்காளர் பட்டியல் கடந்தாண்டு அக்., மாதம் வெளியிடப்பட்டது. அதன்பின், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம், பெயர், வயது உள்ளிட்டவைகளில் திருத்தங்கள் செய்ய விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

பணிகள் நிறைவடைந்து, இறுதி வாக்காளர் பட்டியில் நேற்று வெளியிடப்பட்டது. பொள்ளாச்சி சப் - கலெக்டர் கேத்ரின் சரண்யா, பட்டியலை வெளியிட்டார். தேர்தல் பிரிவு அதிகாரிகள் பங்கேற்றனர்.

* பொள்ளாச்சி தொகுதியில், ஆண், 1,08,969, பெண், 1,20,073, மற்றவர்கள், 44 என மொத்தம், 2,29,086 வாக்காளர்கள் உள்ளனர். ஆண் - 2,279, பெண் - 2,901, மற்றவர்கள் - 5 என மொத்தம், 5,185 பேர் சேர்க்கப்பட்டனர். இறந்தவர்கள் - 1,433, வெளியூர் சென்றோர் - 3,026, இருமுறை பதிவு - 126 என மொத்தம், 4,585 பேர் நீக்கம் செய்யப்பட்டனர்.

* வால்பாறை தொகுதியில், ஆண் - 94,250, பெண் - 1,04,505, மற்றவர்கள் - 26 என மொத்தம், 1,98,781 பேர் உள்ளனர்.ஆண் - 2,009, பெண் - 2,389 மற்றவர் - 1 என மொத்தம், 4,399 பேர் சேர்க்கப்பட்டனர். இறப்பு - 2,216, வெளியூர் - 2,306, இருமுறை பதிவு - 269 என மொத்தம், 4,791 பேர் நீக்கப்பட்டனர்.

* கிணத்துக்கடவு தொகுதியில், ஆண் - 1,70,808, பெண் - 1,78,963, மற்றவர்கள் - 44 என மொத்தம், 3,49,815 வாக்காளர்கள் உள்ளனர்.10,097 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர்; 3,633 பேர் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

அனைத்து தொகுதியிலும், ஆண் வாக்காளர்களை விட, பெண் வாக்காளர்களே அதிகளவு உள்ளனர். இறுதி வாக்காளர் பட்டியல், சப் - கலெக்டர் அலுவலகம், தாலுகா அலுவலகங்களில் பார்வைக்காக வைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

* உடுமலை, மடத்துக்குளம் தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. கோட்டாட்சியர் குமார், தாசில்தார்கள் விவேகானந்தன், பானுமதி, தேர்தல் பிரிவு தாசில்தார்கள் சையது ராபியாம்மாள், வளர்மதி மற்றும் அரசியல் கட்சி பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

உடுமலை தொகுதியில், 2,763 ஆண்கள், 3,392 பெண்கள், ஒரு மூன்றாம் பாலினத்தவர் என, 6,156 பேர் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர். அதே போல், 946 ஆண்கள், 1,003 பெண்கள், ஒரு மூன்றாம் பாலினத்தவர் என, 1,950 பேர் நீக்கப்பட்டுள்ளனர்.

இறுதி வாக்காளர் பட்டியலில், 1,28,771 ஆண்கள்; 1,40,116 பெண்கள்; 31 மூன்றாம் பாலினத்தவர் என, மொத்தம், 2,68,918 வாக்காளர்கள் உள்ளனர்.

* மடத்துக்குளம் தொகுதியில், 2,089 ஆண்கள், 2,541 பெண்கள் என, 4,630 பேர் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர். 459 ஆண்கள், 536 பெண்கள், ஒரு மூன்றாம் பாலினத்தவர் என, 996 பேர் நீக்கப்பட்டுள்ளனர்.

இறுதி வாக்காளர் பட்டியலில், 1,16,739 ஆண்கள்; 1,23,338 பெண்கள், 18 மூன்றாம் பாலினத்தவர் என, மொத்தம், 2,40,095 பேர் இடம் பெற்றுள்ளனர்.

இரு தொகுதிகளிலும், புதிதாக, 10,786 பேர் வாக்காளர் பட்டியலில் இணைந்துள்ளனர். 1,946 பெயர் நீக்கம் செய்யப்பட்டுள்ளது. அதே போல், உடுமலை தொகுதியில், ஆண்களை விட, பெண்கள், 11,345 பேர் கூடுதலாக உள்ளனர்.

மடத்துக்குளம் தொகுதியிலும், ஆண் வாக்காளர்களை விட, 6,599 பெண் வாக்காளர்கள் கூடுதலாக இடம் பெற்றுள்ளனர். புதிதாக வாக்காளர் பட்டியலில் இணைவதிலும், ஆண்களை விட பெண்கள் கூடுதலாக ஆர்வம் காட்டியுள்ளனர்.

பட்டியலில் பேரு இருக்காணு பாருங்க!

வருவாய்துறை அதிகாரிகள் கூறியதாவது:இறுதி வாக்காளர் பட்டியல் அனைத்து வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகங்களில், பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படும்.வாக்காளர்கள் தங்களது பெயர், வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளதா மற்றும் விபரங்கள் சரியாக உள்ளனவா என்பதை உறுதி செய்ய, இறுதி வாக்காளர் பட்டியலை பார்வையிடலாம்.உதவி வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகங்கள் மற்றும் தங்களது பகுதிக்கான ஓட்டுச்சாவடி நிலை அலுவலரிடம் வாக்காளர் பட்டியலை பார்வையிடலாம். பெயர் சேர்த்தல், நீக்கம் மற்றும் திருத்தம் தொடர்பான பணிகள், அனைத்து வாக்காளர் பதிவு அலுவலர், உதவி வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலங்களிலும் மேற்கொள்ளப்படும்.வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தம் செய்வது தொடர்பாக, www.voters.eci.gov.in எனும் இணைய முகவரியின் வாயிலாகவோ அல்லது 'வோட்டர்ஸ் ெஹல்ப் லைன்' மொபைல் செயலி வாயிலாகவோ பொதுமக்கள் விண்ணப்பம் செய்யலாம்.இவ்வாறு, அதிகாரிகள் தெரிவித்தனர்.



-- நிருபர் குழு -






      Dinamalar
      Follow us