தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ ஓட்டுச்சாவடி வசதிகள்: அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவு

 ஓட்டுச்சாவடி வசதிகள்: அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவு

 ஓட்டுச்சாவடி வசதிகள்: அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவு


ADDED : பிப் 08, 2026 05:14 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 08, 2026 05:14 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கோவை: சட்டசபை தேர்தலை முன்னிட்டு, தேர்தல் மண்டல அலுவலர்களுக்கான பயிற்சி முகாம், ஆர்.எஸ்.புரம் கலையரங்கில் நடைபெற்றது.

இதில் பத்து சட்டசபை தொகுதிகளை சேர்ந்த அலுவலர்கள் பங்கேற்றனர். ஓட்டுச்சாவடி மையங்களுக்கான தணிக்கை அறிக்கை படிவங்கள் வழங்கப்பட்டன.

ஓட்டுச்சாவடி மையக் கட்டடத்தின் நிலை, நுழைவாயில்களின் எண்ணிக்கை, மின்சாரம், குடிநீர், கழிப்பறை, இணையதள வசதி மற்றும் ஓட்டுச்சாவடி சார்ந்த காவல் நிலைய விவரங்கள் உள்ளிட்ட 30 பிரிவுகளின் கீழ் ஆய்வு செய்ய அறிவுறுத்தப்பட்டது.

இந்த ஆய்வு பணிகளை முடித்து, வரும் பிப். 11ம் தேதிக்குள் 'செக் லிஸ்ட்' சமர்ப்பிக்க மண்டல அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

கலெக்டர் பவன்குமார் பேசுகையில், ''எஸ்.ஐ.ஆர். பணிகளுக்கு பிறகு ஓட்டுச்சாவடிகளின் எண்ணிக்கை அதிகரித் துள்ளது.

336 மண்டல குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. கிராமப்புற, நகர்ப்புற தொகுதிகளில் ஓட்டுச்சாவடி மையங்களின் கட்டமைப்பு மாறுபடும் என்பதால், அது குறித்து அலுவலர்கள் நன்கு அறிந்திருப்பது அவசியம். ஓட்டுச்சாவடிகளில் உறுதி செய்யப்பட்ட குறைந்தபட்ச அடிப்படை வசதிகள் இருக்கிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும்,'' என்றார்.

மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் கூறுகையில், ''தேர்தல் ஆணையம் வழங்கும் புதிய அறிவுறுத்தல்களை தேர்தல் அலுவலர்கள் முழுமையாக அறிந்து கொள்ள வேண்டும்.

அவற்றை நடைமுறைப்படுத்துவது குறித்து உங்கள் கீழ் பணியாற்றுபவர்களுக்கும், உரிய பயிற்சி அளிக்க வேண்டும்,'' என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us