எல்லை கோடுகள் வரைந்து தயாராகும் ஓட்டுச் சாவடிகள்
எல்லை கோடுகள் வரைந்து தயாராகும் ஓட்டுச் சாவடிகள்
ADDED : ஏப் 21, 2026 05:43 PM

சூலூர்: சூலூர் தொகுதியில், வாக்காளர்களை வரவேற்க ஓட்டு சாவடிகள் தயாராகி வருகின்றன.
சட்டசபை தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு நாளை நடக்க உள்ள நிலையில், வாக்காளர்களை வரவேற்க ஓட்டுச் சாவடிகள் தயாராகி வருகின்றன. சூலூர் தொகுதியில், 385 ஓட்டு சாவடிகள் அமைக்கப்பட உள்ளன.
கிராம நிர்வாக அலுவலக ஊழியர்கள், உள்ளாட்சி நிர்வாகத்தின் ஊழியர்கள் தங்கள் பகுதியில் உள்ள ஓட்டு சாவடிகளை தயார் படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஓட்டு சாவடிகளில் இருந்து, 100 மீ., மற்றும் 200 மீ., எல்லை கோடுகளை அனைத்து ரோடுகளிலும் வரைந்து அடையாளப்படுத்தி உள்ளனர். 100 மீ., வரை வாகனங்கள் அனுமதிக்கப்படும்.
அதுவரை வாக்காளர்கள் வாகனங்களில் செல்லலாம். அந்த 100 மீ., பகுதிக்குள் அரசியல் கட்சி சின்னங்கள், விளம்பரங்கள், கொடி கம்பங்கள் இருந்தால் அவற்றை அகற்றி வருகின்றனர். 200 மீ., அப்பால் பூத் சிலிப் மையங்களை அரசியல் கட்சியினர் அமைத்து கொள்ள வசதியாக ஒரு கோடும் வரைந்து அடையாளப்படுத்தி வருகின்றனர்.
மேலும், ஓட்டு சாவடி வளாகங்களை தூய்மை படுத்தும் பணியிலும் உள்ளாட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர்.
