/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மண்டல தடகள போட்டி மகளிர் பாலிடெக் அபாரம்
/
மண்டல தடகள போட்டி மகளிர் பாலிடெக் அபாரம்
ADDED : பிப் 20, 2026 05:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை:தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பாலிடெக்னிக் கல்லுாரிகளுக்கு இடையே(ஐ.பி.ஏ.ஏ.,) கோவை மண்டல அளவிலான தடகள போட்டிகள் நேரு ஸ்டேடியத்தில் இரு நாட்கள் நடந்தது. 17 ஆண்கள், 12 மகளிர் கல்லுாரிகளை சேர்ந்த மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.
ஆண்கள் சாம்பின்ஷிப் பட்டத்தை 62 புள்ளிகளுடன், ஸ்ரீ ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயா, பெண்கள் சாம்பியன்ஷிப் பட்டத்தை 51 புள்ளிகளுடன் அரசு மகளிர் பாலிடெக்னிக் வென்றது.
185 புள்ளிகளுடன் 'கேம்ஸ் அண்ட் அதலெடிக் சாம்பியன்ஷிப்' பட்டத்தை அரசு மகளிர் பாலிடெக்னிக் வென்றுள்ளது. கல்லுாரி முதல்வர் ஜெயசித்ரா, உடற்கல்வி இயக்குனர் பாரதிராஜ் பரிசு வழங்கினர்.

