/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பாலிடெக்னிக் கல்லுாரி ஆண்டு விழா
/
பாலிடெக்னிக் கல்லுாரி ஆண்டு விழா
ADDED : மார் 18, 2024 10:50 PM
பெ.நா.பாளையம்:துடியலூர் அருகே வட்டமலை பாளையத்தில் உள்ள ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரியில், 28ம் ஆண்டு விழா நடந்தது.
விழாவில், மெக்கானிக்கல் துறை தலைவர் சுரேஷ்குமார் வரவேற்றார். கல்லூரி முதல்வர் உமா ஆண்டறிக்கை வாசித்தார். எஸ்.என்.ஆர்., சன்ஸ் அறக்கட்டளை நிறுவனங்களின் இணை நிர்வாக அறங்காவலர் சுந்தர் தலைமை வகித்தார்.
சிறப்பு விருந்தினராக கோவை அசோசியேசன் ஆப் கன்சல்டிங் சிவில் இன்ஜினியர் அமைப்பின் தலைவர் சுதாகர் பங்கேற்று பேசுகையில், கல்வியின் வாயிலாக ஒருவர் உயர்நிலை அடைய முடியும். விடா முயற்சி, கடின உழைப்பு, தொடர்ந்து ஆர்வத்துடன் செயல்படுவது, யாரையும் சார்ந்து வாழாமல், தன்னம்பிக்கையோடு எதையும் எதிர்கொள்ளும் போது தான் சிறந்த வெற்றியாளராக முடியும் என்றார்.
விழாவில், ஒவ்வொரு துறையிலும் சிறந்த மாணவர்களுக்கு பரிசுத் தொகையுடன், கேடயம், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடந்தது. விழாவில், கல்லூரி ஆசிரியர்கள், பணியாளர்கள், மாணவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

