தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ ஓட்டு வீட்டை காக்கும் ‘பாலியூரித்தீன் போம் ஷீட்’ மழைக்காலத்தில் டபுள் பாதுகாப்பு

ஓட்டு வீட்டை காக்கும் ‘பாலியூரித்தீன் போம் ஷீட்’ மழைக்காலத்தில் டபுள் பாதுகாப்பு

ஓட்டு வீட்டை காக்கும் ‘பாலியூரித்தீன் போம் ஷீட்’ மழைக்காலத்தில் டபுள் பாதுகாப்பு


ADDED : செப் 18, 2026 04:21 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 18, 2026 04:21 PM


Follow on Google
அ நிறம் | அளவு

* நாங்கள் கட்டிக்கொண்டிருக்கும் வீட்டிற்கு யு.பி.வி.சி., ஜன்னல் பொருத்தலாம் என்று உள்ளோம். அந்த ஜன்னல் தரத்தை எவ்வாறு அறிந்து கொள்வது?

–பழனிசாமி: மர ஜன்னல்களுக்கு மாற்றாக யு.பி.வி.சி., ஜன்னல்கள் பொருத்துவது நல்ல தீர்வு. இந்த ஜன்னல் நீண்ட காலம் பிரச்னை இல்லாமல் இருக்க, ஜன்னல் வாங்கும்முன் அதனுடைய புரொபைல், மல்டி சேம்பர் புரொபைல், தடிமன், வெயில் அதிகம் படும் இடங்களுக்கு ‘யு.வி., ரெஸிஸ்டன்ட்’ மற்றும் வெதர் ரெசிஸ்டன்ட் புரொபைல் முக்கியம். பெரிய ஷட்டர், ஸ்லைடிங் விண்டோஸ் உள்ளே ‘கால்வனைஸ்ட் ஸ்டீல்’ உள்ளதா என்பதை சரி பார்க்க வேண்டும்.

பொருத்தப்படும் கண்ணாடி 5 மி.மீ., அல்லது 6 மி.மீ., உள்ளதா என்பதை கவனிக்கவும். லாக், ஹேண்டில், ரோலர், விங்ஸ் போன்றவை தரமானதாக உள்ளதா என்பதையும் பார்ப்பது நல்லது.

சுவரில் பிரேமை பொருத்தும் போது, ‘லெவல் பிளம்ப்’ மற்றும் மூல மட்டம் சரியாக இருக்க வேண்டும். பக்கவாட்டில் உள்ள சந்தை, தரமான சிலிக்கன் பேஸ்ட் கொண்டு நிரப்பினால் மழைக்காலங்களில் தண்ணீர் புகாமல் இருக்கும்.

* எங்கள் வீட்டிற்கு கருப்பு நிறத்தில் குடிநீர் குழாய் இணைப்பு கொடுத்து இருக்கிறார்கள். பழைய பி.வி.சி., குழாய்களை மாற்றி அனைத்து சாலைகளிலும் கருப்பு நிறத்தில் பிரதான குழாய்களை பொருத்துகிறார்கள். இது என்ன வகை மெட்டீரியல்; தரம் எப்படி?

–சார்லஸ்: இந்த குழாய்களை எச்.டி.பி.இ., எனப்படும் உயர் அடர்த்தி ‘பாலிஎத்திலின்’ என்பார்கள். ஆயுள் அதிகம், எடை குறைவானது, அரிப்பை எதிர்க்கக்கூடியவை, குறைந்த கசிவு, விரைந்து பொருத்துதல் போன்ற காரணங்களுக்காக இவற்றை அதிகம் பயன்படுத்துகின்றனர்.

* மழைக்காலங்களில் குடிநீர் செந்நிறமாக வருகிறது. நாம் அந்த நீரை நேரடியாக கட்டுமானத்திற்கு பயன்படுத்தலாமா?

–கோமதி: செந்நிறம் அல்லது பழுப்பு நிற தண்ணீர் புதிதாக கட்டும் கட்டடத்தில் நேரடியாக பயன்படுத்துவதற்கு பரிந்துரைக்கப்படாது. செந்நிறமாக குடிநீர் வருவதற்கு பொதுவாக மண், சேறு கலப்பு, துரு போன்றவை காரணமாக இருக்கலாம். நீரின் தரம் பரிசோதிக்கப்பட்டு பி.எச்., டி.டி.எஸ்., குளோரைடு, சல்பேட், கடினத்தன்மை உள்ளிட்டவை சரியான அளவுகளில் இருந்தால் கட்டுமானத்திற்கு பயன்படுத்தலாம். அதை ஆய்வகத்தில் அறிந்துகொள்ளலாம்.

* நாங்கள் 20 ஆண்டுகளுக்கு முன் சொந்தமாக 5.5 சென்ட் இடத்தில் மனை வாங்கினோம். வீடு கட்ட மாநகராட்சியை அணுகியபோது பட்டா மற்றும் இதர ஆவணங்கள் இணைத்து அனுப்ப அறிவுறுத்தினார்கள். நாங்கள் தாலுக்கா அலுவலகத்தில் தனி பட்டாவுக்கு விண்ணப்பிப்பதா அல்லது கூட்டு பட்டாவிற்கு விண்ணப்பிப்பதா?

–ராமு: பொதுவாக மாநகராட்சியில் வீடு கட்ட, ‘அப்ரூவல்’ பெறுவதற்கு இரண்டில் ஏதாவது ஒன்று இருந்தால் போதும். கூட்டு பட்டாவைவிட உங்கள் பெயரில் தனிப்பட்ட பட்டா வாங்குவதே நல்லது. தனிப்பட்டா குறிப்பிட்ட உரிமையாளருக்கு சொந்தமானது. அதில், மனையின் அளவுகள் மற்றும் வழித்தடம் அறியலாம். கூட்டு பட்டா மனை பலரின் பெயரில் உரிமை உள்ளதாக இருக்கும் மற்றும் பங்குதாரர்களின் உரிமையை சரிபார்க்க வேண்டும்.

* ஓட்டு வீட்டில் வசிக்கிறோம். மழை காலங்களில் தண்ணீர் உள்ளே வருகிறது. அதை மாற்றி ‘பி.யு.எப்.எப்., ஷீட்’ போடலாம் என்று உள்ளோம். அதன் பயன்கள் என்ன?

–சின்னசாமி: ‘பாலியூரித்தீன் போம் ஷீட்’(பி.யு.எப்.எப்.,) என்பது இரண்டு மெட்டல் ஷீட்டுக்கு நடுவே வெப்பத்தை கடத்தாத இன்சுலேஷன் அடுக்கை வைத்து ‘சாண்ட்விச்’ முறையில் தயாரிக்கப்படும் ஒரு குறை தகடு.

இது சாதாரண தகடுகளைப் போல் இல்லாமல் வெயில் காலங்களில் வெப்பம் உள்ளே இறங்குவதையும், மழைக்காலங்களில் அதிக சத்தம் எழுப்புவதையும் பெருமளவு தடுக்கிறது. துருப்பிடிக்காது. மழை, ஈரப்பதத்தால் எளிதில் சேதம் அடையாது.

குறைந்த எடை, கையாள எளிதானது. குறைந்த நேரத்தில் அமைத்து விடலாம். இதன் தடிமன் 30 மி.மீ., முதல் 150 மி.மீ., வரை மார்க்கெட்டில் கிடைக்கிறது.

–தங்கவேல், 

துணை தலைவர்,

கோயம்புத்துார் மாவட்ட அனைத்து கட்டுமான பொறியாளர் சங்கம்(காட்சியா).

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us