/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குளம், குட்டைகள் துார்வாரவில்லை: மழைநீர் வீணாகும் அவலம்
/
குளம், குட்டைகள் துார்வாரவில்லை: மழைநீர் வீணாகும் அவலம்
குளம், குட்டைகள் துார்வாரவில்லை: மழைநீர் வீணாகும் அவலம்
குளம், குட்டைகள் துார்வாரவில்லை: மழைநீர் வீணாகும் அவலம்
ADDED : ஆக 19, 2025 09:33 PM

பொள்ளாச்சி:
பருவமழை பெய்யும் நிலையில், குளம்,குட்டைகள் தூர்வாரப்படாமல் உள்ளதால், மழை நீர் சேமிக்க முடியாமல் வீணாகிறது.
கிராமப்புறங்களில், குளம், குட்டைகள் உள்ளிட்ட உள்ளூர் நீர் ஆதாரங்கள் பராமரிக்கப்பட்டன. மழை காலங்களில், ஓடைகள் வழியாக வரும் நீர், குளம், குட்டைகளில் சேகரிக்கப்பட்டு, நிலத்தடி நீர் மட்டமும் குறையாமல் இருந்தது.
இதனால், போதுமான நீர் ஆதாரம் கிடைத்து வந்ததால், விவசாயிகளும், பொதுமக்களும் பயன்பெற்று வந்தனர்.
கோடை காலங்களில், குடிநீர் பிரச்னையும் தலைதுாக்காமல் இருந்ததால் மக்களும் நிம்மதியாக இருந்தனர்.
காலப்போக்கில், நீர் ஆதாரங்களான குளம், குட்டைகளும் ஆக்கிரமிப்பாளர்களால், காணாமல் போய் வருகின்றன. நிலத்தடி நீர் ஆதாரத்திற்கு உதவும் குளம், குட்டைகள் முறையாக பராமரிக்கப்படுவதில்லை.
நீர் சேமிப்புக்கு பயன்படுத்தப்பட்ட குளம், குட்டைகள், தற்போது, சாக்கடை கழிவுகளும், குப்பை, கட்டட கழிவுகள் கொட்டும் பகுதியாக மாறியுள்ளன. இதனால், குளம், குட்டைகள் மாசுபட்டு, நீரை சேமிக்க முடியாத சூழல் காணப்பட்டது.
மழை காலங்களில் வரும் நீர் சேமிக்க முடியாமல், சாக்கடை கால்வாயில், கலந்து வீணாகிறது. நீர் செல்லும் ஓடைகளும் புதர்கள் மண்டி, நீர் செல்ல வழியில்லாமல் உள்ளன. மேலும், ஓடைகளில், கழிவுகளை கொட்டுவதால், நீர் மாசுபடுகிறது.
இதுபோன்று பல்வேறு பிரச்னைகளால், நிலத்தடி நீர்மட்டம் படிப்படியாக குறைந்து, அதலபாதாளத்திற்கு செல்கிறது. இதன் விளைவாக, கிராமங்களில் குடிநீர் பிரச்னை, விவசாயத்துக்கு தண்ணீர் பற்றாக்குறை போன்ற பிரச்னைகள் ஏற்பட்டுள்ளன.
முன்வருவார்களா? மழை நீரை சேமிக்க, மக்களின் பங்களிப்பும் அவசியம், எனவே, அமைப்புகளுடன் இணைந்து, நீர் ஆதாரங்களை பெருக்க மக்களும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
தற்போது மழை பெய்யும் சூழலில், குளம், குட்டைகளுக்கு நீர் வர துவங்கியுள்ளது. நீர் ஆதாரங்கள் துார்வாரப்படாததால், வீணாகச்செல்லும் அவலம் உள்ளது.
நீர்வழித்தட ஆக்கிரமிப்பு அகற்றி, நீர் ஆதாரங்களை துார்வாரி பராமரிக்க இனியாவது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

