ADDED : ஜூலை 17, 2025 10:37 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அன்னுார்; அன்னுார், ஓதிமலை சாலையில் உள்ள பெரிய அம்மன் கோவில் மற்றும் மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள சின்னம்மன் கோவில், கரியாம்பாளையம், ராக்கியண்ண சாமி கோவிலின் 55வது ஆண்டு பொங்கல் அபிஷேக ஆராதனை விழா கடந்த 13ம் தேதி கிராம சாந்தி பூஜை உடன் துவங்கியது.
வருகிற 22ம் தேதி காலை 6:00 மணிக்கு, சின்னம்மன் கோவிலில் அபிஷேகமும், மகா தீபாராதனையும் நடைபெறுகிறது. ஆனைமலை கருப்பராயன் கோவிலில் இருந்து பெரிய அம்மன் கோவிலுக்கு கரகம் எடுத்துச் செல்லப்படுகிறது.
காலை 11:00 மணிக்கு பக்தர்கள் பூங்கரகம் எடுத்து வருகின்றனர். மாலையில் கரகங்களை கங்கையில் இடும் நிகழ்ச்சி நடக்கிறது.

