ADDED : ஜன 15, 2026 05:15 AM

அ நிறம் | அளவு
கோவை: பீளமேட்டிலுள்ள பா.ஜ.,அலுவலகத்தில் பொங்கல் விழா பாரம்பரியத்துடனும் பழமை மாறாமலும் கொண்டாடப்பட்டது.
பா.ஜ.,அலுவலக நுழைவாயிலில் அடுப்புமூட்டி இரண்டு பானைகளில் மகளிர் பிரிவினர் பொங்கல் வைத்தனர். பொங்கல் பொங்க, குலவை ஒலி எழுப்பி கும்மியடித்து ஆடினர். ஜமாப் இசைக்குழுவினரின் இசை முழங்கியது. கலைநிகழ்ச்சிகள், பழமையான விளையாட்டுகள் ஆட்டம், பாட்டம் கொண்டாட்டங்களில் கட்சி நிர்வாகிகளும்,தொண்டர்களும் ஈடுபட்டனர். கட்சி நிர்வாகிகள், தொண்டர்களுக்கு பரிசுப்பொருட்களை வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.
