ADDED : ஜன 09, 2026 05:17 AM

அ நிறம் | அளவு
பீளமேடு, ஜன. 9-
சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச ஜவுளி மற்றும் மேலாண்மை கல்லூரியில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் ஒன்றிணைந்து பொங்கலிட்டனர். நிகழ்வில், பேஷன் ஷோ நடத்தப்பட்டது. ஜவுளி கலைநயம் மற்றும் படைப்பாற்றலை வெளிப்படுத்தும் வகையில், கல்லூரியில் வடிவமைக்கப்பட்ட ஆடைகளை அணிந்து மாணவர்கள் அணிவகுத்தனர்.
தொடர்ந்து நடைபெற்ற கலை நிகழ்ச்சிகளில் பாரம்பரிய நாட்டுப்புற இசை மற்றும் மாணவர்களின் நடன நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. மேலும், மாணவர்களுக்காக பல்வேறு வேடிக்கை விளையாட்டுகள் நடத்தப்பட்டன. போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
