/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவையில் காணும் பொங்கல் உற்சாகம்
/
கோவையில் காணும் பொங்கல் உற்சாகம்
ADDED : ஜன 18, 2024 12:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை : பொங்கல் பண்டிகையின் நான்காவது நாளான நேற்று, கோவையில் காணும் பொங்கல் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
காணும் பொங்கலை, கோவை பகுதியில் பூப்பறிக்கும் நோம்பி என்றும் சொல்வது உண்டு. கிராமங்களில் வசிப்பவர்கள், மாலை நேரங்களில் ஆறுகள் அல்லது குளங்கள் உள்ள பகுதிகளுக்கு குடும்பத்தினர், உறவினர் மற்றும் நண்பர்களுடன் சென்று, காணும் பொங்கலை கொண்டாடினர்.
பல கிராமங்களில் கபடி, உறி உடைத்தல், ஆடல், பாடல் என, காணும் பொங்கல் களைகட்டியது. கோவை நகரத்தில் வசிப்பவர்கள் வாலாங்குளம், உக்கடம் பெரியகுளம், ரேஸ்கோர்ஸ், சிதம்பரம் பூங்கா, காந்தி பூங்கா உள்ளிட்ட இடங்களுக்கு சென்று, காணும் பொங்கலை கொண்டாடினர்.